தமிழ்த் தேசியவாதி

Thursday, August 13, 2009

தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

கருத்தியல் என்பது உணர்வுகள், சிந்திப்புகள் ஊடாக உருப்பெற்று செயற்பாட்டு நிலையை நோக்கி பயணிக்கின்ற போது, வரலாறாக மாற்றம் பெறுகின்றது. வரலாற்றின் வழி செல்லும் நாம், சாதகமான பாதைகள+டாக பயணிப்பது மட்டுமன்றி, சவால் மிகுந்த களங்களையும் எதிர்நோக்குகிறோம்.

அத்தகையதொரு நெருக்கடி மிகுந்த சூழலுக்குள்ளேயே, தமிழ் தேசிய உரிமைப் போராட்டமும் சிக்கியுள்ளது. அண்மைக்காலமாக, தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்து வருகிற தமிழ் தேசியப் போராட்டத்திற்கு அச்சாணியாக, ஒகஸ்ட் 8ம் திகதி இடம்பெற்று முடிந்த யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நசரசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்தை வேரோடு அழிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக, தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்திய அரசாங்கத்துக்கு, தக்க பதிலை, அதே தேர்தலினூடாக தமிழ் மக்கள் வழங்கியுள்ளார்கள். இது ஒரு சுதந்திரமானதொரு தேர்தலாக இல்லாத போதும், கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல்.

தேர்தலை நடத்துவதற்கான அக, புறச் சூழல்கள் அறவே இல்லாத ஒரு சந்தர்ப்பத்திலேயே, இந்த தேர்தலை ராஜபக்ச அரசாங்கம் நடத்தி முடித்தது. இராஜபக்சவின் குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, கட்சியை வெற்றி பெறச் செய்யும் நோக்கோடு, தேர்தல் முறைகேடுகள், மோசடிகள் தாரளமாகவே இடம்பெற்றுள்ளன. சட்டத்திற்கு புறம்பான வகையில், அரச சொத்துக்கள் வெற்றிலை சின்னத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கபட்டுள்ளனர். ஆகமொத்தத்தில், யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நசரசபை தேர்தல்கள் சுதந்திரமானதும் நீதியானதுமாக அமையாவிட்டாலும், தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள பற்றுறுதியை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் பிரதான அம்சம் யாதெனில், வெல்லப்பட்ட வாக்குகள் என்பதை விட, அளிக்கப்படாத வாக்குகள் சொல்லும் செய்தி கனதியானது.

சுமார் ஒன்றரைத் தசாப்த காலமாக இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்கின்ற போதும், தமது அரசியல் அபிலாசையை தமிழ் மக்கள் மிக மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். சர்வதேச சமூகமும், புலம்பெயர் தமிழர்களும் கூட பெருமளவில் எதிர்பார்த்திராத திருப்பத்தை, அண்மையில் நடைபெற்ற தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. அடக்குமுறைக்குள் வாழ்கின்ற போதும் தமிழர் உரிமைப் போராட்டம் மீது தமக்கிருக்கும் அடங்காப்பற்றை அவர்கள் திட்டவட்டமாகத் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒரே தடவையில், ஒரு செயற்பாடினுடாக பல தரப்பினருக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை எமது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக, வடபகுதியில் அரச திணைக்களத்தில பணியாற்றும் நண்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “எத்தகைய அடக்குமுறைக்குறைகளைப் பிரயோகித்தாலும், விடுதலை மீதான எமது வேட்கையை தணிய செய்யவோ அல்லது எம்மை பணியவைக்கவோ முடியாது. எமது நடமாட்டங்களை கட்டுப்படுத்தலாம், பட்டினியால் எம்மை வருத்தலாம், ஆனால், எமது விடுதலை மீதான எமது உணர்வினை அழிக்கமுடியாது. தமது கைகளுக்கு கட்டுப்போடப்பட்டுள்ளதே தவிர கண்களுக்கல்ல. சந்தர்ப்பம் வரும்போது செய்ய வேண்டியதை செய்வோம் என பேர்நிறுத்த காலப்பகுதியிலே இராணுவத்தினர் எம்மை மிரட்டினார்கள். அடக்குமுறையாளர்களுக்கு நாம் இன்று சொல்கிற செய்தி யாதெனில், எம்மை அடக்குமுறைக்குள் உட்படுத்தலாம், ஆனால் எமது தாயகம் மீதான உணர்வினை சிதைக்க முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் அதை வெளிப்படுத்துவோம் ” என்றார் அவர்.

ஏலவே குறிப்பிட்டது போல இது தனித்து சிங்கள இனவெறி அரசுக்கு மட்டும் சொல்லப்பட்ட விடயம் அல்ல. அதையும் தாண்டி, தமது சுயத்தை இழந்து, சூழ்நிலை கைதிகள் போல்; சிங்கள ஆட்சியாளர்களோடு கைகோத்து வலம்வரும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சொல்லப்பட்டுள்ள சேதியாகும். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கவலையடைந்துள்ள அமைச்சர் டக்களஸ் தேவானந்தா, இதை ஒரு தோல்விபோலவே தான் கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளார். உண்மையில், இவர் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டுமானால், கவலையடைவதை விட்டுவிட்டு, மக்கள் சொன்ன செய்தியை சரிவர புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயற்பட முன்வர வேண்டும்.

சிங்கள பேரினவாதம், தமிழ் தேசியத்தை வேரறுக்க கங்கணம் கட்டி நிற்கும் நிலையிலே, அதனை முறியடிக்க அனைத்து தமிழர்களும் ஓராணியில் திகழவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை, பிளபுபட்டுப்போயுள்ள தமிழ் அரசியல்வாதிகள் உணர வேண்டிய அவசிய சூழல் உருவாகியுள்ளது. ஜனநாயக கட்டமைப்புகளையோ, விழுமியங்களையோ மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்திருப்பதால், தமிழ் மக்களுடைய உரிமையை மீளப்பபெற்றுக்கொள்ள முடியாது. மறுபுறத்தே, தமிழின அழிப்பு அரசாங்கத்துடன் இணைந்திருப்பதானது, எமது இனத்தை அழிப்பவர்களுக்கு துணைபோவதாகவே அர்த்தப்படும். கட்சியின் சின்னத்தை இழந்தவர்கள் நாளை மாறாப்போகும் காட்சியில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கவேண்டி வரலாம்.

அடுத்து, 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கும் ஆகஸ்ட் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலுக்குமான பொது உடன்பாடு யாதெனில், இரண்டு தேர்தல்களிலுமே, ஐக்கிய தேசிய கட்சியை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள். 2005 நவம்பர் தேர்தலில், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலாலேயே தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்றும், அதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததாகவும், சர்வதேச சமூகத்தினர் உள்ளடங்காலாக பல்வேறு தரப்பினரும் கருத்துருவாக்கம் ஒன்றை மேற்கொண்டார்கள், இந்த தேர்தலில் மக்கள் தமது சுயவிருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியதன் பின்னராவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொண்டு அதனை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலிலே, யாழ்ப்பாணத்தில் 82 வாக்குகளையும் வவுனியாவில் 223 வாக்குகளையும் மட்டுமே ஐக்கிய தேசிய கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சி சந்தித்த தேர்தல்களில் மிக மோசமான தோல்வியாகும்.

முதுபெரும் அரசியல்வாதி என்று சொல்லப்படுகிற வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 424 விருப்பு வாக்கினை மட்டுமே பெறமுடிந்துள்ளது. இது இவரது சாதகமான எதிர்பார்;ப்பிற்கு நேரேதிர் மாறானதாகவே அமைந்திருக்கும். ஆனால், ராஜபக்ச அரசாங்கத்தின் அநீதிகளையும் அட்டூழியங்களையும் சுட்டிக்காட்ட தொடங்கியிருப்பதால், இவருக்கான ஆதரளவு தளம் தற்போது சாதகமான முறையில் மாற்றம் அடைவதை அவதானிக்க முடிகிறது. அதை உணர்ந்து செயற்படுவதனூடாக ஆரம்பகாலத்தில் அவருக்கிருந்த ஆதரவுத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்பலாம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பொறுத்தவரை அமோக வெற்றியொன்றை எதிர்பார்த்திருந்தது. அதற்காக பல நாடகங்களையெல்லாம் நடத்தி முடித்தது. ஏ 9 பாதை திறப்பு தொடக்கம் மீள்குடியேற்றம் என பல பசப்பு நாடகங்கள் ஆடப்பட்டது. ஆனால், மக்கள் உரிய பாடத்தை புகட்டியுள்ளார்கள். பாரிய தேர்தல் முதலீட்மை மேற்கொண்டு மாபெரும் வெற்றியை எதிர்பார்த்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆக மொத்தமாக கிடைத்த வாக்குகள் 10,602. இதனூடாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 13 ஆசனங்கள் கிடத்துள்ளன. அதில் 4 ஆசனங்கள் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு சென்றுள்ளது. அப்படியாயின் சுமார் 3000 - 4000 வாக்குகள் புத்தளத்தில் வாழ்ந்து வரும் முஸ்லீம் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளாக இருக்கக்கூடும். அந்த வகையில் பார்க்கப் போனால், ஈபிடிபியினருக்கு கிடைத்திருக்கக் கூடிய அதிககூடிய வாக்குகள் 7 ஆயிரம் மட்டுமே. இது தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகளையும் விட குறைவானது. அது மட்டுமன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் மு.ரெமிடியாஸ் அவர்களே அதிககூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர் மூத்த அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரி அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட சுமார் பத்து மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளை, மு.ரெமிடியாஸ் அவர்களின் விருப்பு வாக்கானது, ஈபிடிபியினர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளில் 50மூ தையும் விட அதிகமானது,

இவையெல்லாம், ஒட்டுமொத்தமாக சொல்லும் சேதி யாதெனில், யாரும் வராலம் போகலாம். எத்தகைய சலுகைகளையும் வழங்கலாம். மக்களை ஒடுக்குமுறைக்குள் வைத்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் சுமந்துள்ள தாயகவிடுதலைiயென்ற இலட்சியத்தையும், சுதந்திரக் கனவையும் யாராலும் தகர்க்க முடியாது என்பதாகும். தாம் என்றும் தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்தின் பக்கமே நிற்போம் என்பதை, வாக்களித்ததனூடாகுவம், வாக்களிக்காததனூடகவும் திட்டவட்டமாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதேவேளை, சோர்வடைந்து விடாமல், தன்னம்பிக்கை தளராமல் உரிமைப் போராட்டம் வெல்லும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுங்கள் என்பதையே, அடக்குமுறைக்குள் வாழ்கின்ற எமது மக்கள், புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தாம் அளித்த வாக்குகள் ஊடகவும், செலுத்தப்படாத வாக்குகள் ஊடாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில், மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு மக்களுக்கான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நடந்து முடிந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் மயப்பட்டபோராட்ம் தோல்வியடையாது. அடுத்த கட்ட அரசியல் போராட்டத்திற்கு தயாராகின்ற தமிழ் தேசியம் இதனை அடிப்படையாகக் கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கப்படுவதனூடாக, தமிழ் மக்களின் இலட்சிய பயணத்தை அடையமுடியும்.

தேர்தலும் தமிழ் மக்களுடைய தார்மீகப் பொறுப்பும்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் “மறுசீரமைப்பு” என்ற கட்டத்துக்குள் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த தருணத்திலே, அவர்களின் உரிமைப் போராட்டமும், மாறுபடாத உயரிய இலக்கினை அடைவதற்காக, வடிவங்களை மாற்றிக்கொள்ளள வேண்டிய சூழலை எதிர்நோக்கியுள்ளது. அந்த வடிவமாற்றத்தின் பிரதான அங்கமாக, வன்முறையற்ற வழியில் எமது போராட்ட சக்கரத்தை நகர்த்தி, ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்பும் ஒரு நகர்வை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

இதனை கட்டமைக்கும் ஒரு படிக்கல்லாக, எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள உள்ள+ராட்சி சபைத் தேர்தலை தமிழ்மக்கள் பயன்படுத்தலாம். வன்முறையற்ற வழியினிலே ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டம், காலத்தின் கட்டாயத்தாலும், அடக்குமுறையாளர்களின் நிர்ப்பந்தத்தாலும் ஆயுதம் தரிக்க வேண்டிய சூழல் உருவானது. முப்பத்தெட்டு வருடங்கள் கழிந்த நிலையில், அத்தகைய போக்கினை இன்றைய ப+கோள அரசியல் மாற்றியமைத்துள்ளது.

தமிழர்கள் வன்முறையை விரும்புகின்ற ஒரு சமூகம் அல்ல, அவர்கள் மீது திணிக்கப்பட்;;ட வன்முறையை எதிர்ப்பதற்கான ஒரு கருவியாக, மற்றும் தற்காப்புக்காக ஆயுதங்களை ஏந்தினார்கள் என்ற கருத்தை வலியுத்தி கூறிவரும் தமிழ் பேசும் மக்கள், ஐனநாயக பண்பில் தமக்கு இருக்கும் பற்றினை வெளிப்படுத்த வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. நீதி நெறி நின்று, இலட்சியத்தை வரிந்து கொண்டு 1976 ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரித்த தமிழ் தேசியம், தனது நிலைப்பாட்டை 2004 பொதுத் தேர்தலிலும் மீள்வலியுத்தியது. சுயநிர்ணய உரிமை அடிப்பைடயில் சுதந்திர தேசத்தை வேண்டி நிற்கும் தமிழ் தேசத்துக்கு இன்றும் உயிர் மூச்சாக திகழ்வது வட்டுக்கோட்டைத் தீர்மானமும், அதன் வழிவந்த திம்புக் கோட்பாடும் ஆகும்.

வலிகளை, இழப்புக்களை, அவலங்களை சுமக்காமல், சவால்களை, எதிர்ப்புக்களை, பின்னடைவுகளை, தோல்விகளை, துரோகங்களை சந்திக்காமல் எந்தவொரு இனவிடுதலைப் போராட்டமும் சுதந்திரம் அடைந்ததென்ற வரலாறு இல்லை. தோல்விகளினால் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் தோற்றம் பெற்று போராடிய இனங்களே, அடக்குமுறை என்னும் விலங்கினை உடைத்தெறிந்து, சுதந்திரக்கனவை நனவாக்கினார்கள்.

தமிழ் மக்களினுடைய உரிமைப் போராட்டமும், வரலாற்றிலே என்றுமே சந்தித்திராத நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தை நிரந்தரமாக்குவதனூடாக, தமிழர்களை தொடந்தும் அடக்குமுறை என்னும் பிடிக்குள் வைத்திருந்து, அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதைத்து, அவர்கள் மீதான இனஅழிப்புப் போரை இலாவமாக நகர்த்தலாம் என்ற உத்தியை அடக்குமுறையாளர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.

தமிழர்கள் என்ற அடையாளத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டுமானால், விடுதலை மீதான எமது பற்றை, தமிழர் தாயகம் மீதான எமது பிடிப்பை, அடக்குமுறைக்கு எதிரான எமது வன்முறையற்ற உணர்வை வெளிப்படுத்தி, எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்துக்கு உணர்த் வேண்டிய வரலாற்றுக் கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனுக்கும் உண்டு.

இத்தகையதொரு சந்தர்ப்பத்திலேயே, எதிர்வரும் 8ம் திகதி யாழ் மாநகராட்சி சபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழர்கள் என்ற இனத்தை இலங்கைத் தீவில் இல்லாமல் செய்வதற்கான ஒரு கருவியாக எதிர்வரும் தேர்தலை பயன்படுத்துவதற்கு அடக்குமுறையாளர்கள் திட்டமிட்டுள்ளாhர்கள். ஆகவே, அதனை முறியடித்து, தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட வன்னி மக்கள், அடிப்படைவசதிகள் இன்றி, முட்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களும், யாழ் மக்களும் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள்ளே வாழ்கிறார்கள். சிறீலங்காவின் தென்மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய சூழலுக்குள் இருக்கிறார்கள். ஆகமொத்தத்தில், தமிழ் பேசும் சமூகத்தின் அடிப்படை வசதிகள் ஆட்டம் கண்டு, இயல்பு வாழ்க்கையென்பது சீரழிந்து போயுள்ள சூழலிலே, அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?

தமிழர் தாயகத்கை சிங்கள மயமாக்கும் முயற்சியில் முனைப்பு காட்டியுள்ள அரசாங்கம், தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டபடி தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் என்ன?

போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தையும், போக்குவரத்துக்கான பாஸ் நடைமுறைகளையும் அமுல்படுத்துவதற்கு எதற்காக?

தொடரும் நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகளும், அதி உயர் பாதுகாப்பு வலயமும், இரவு நேர மீன்பிடித் தடையும் யாருக்காக? ஏதற்காக?

வாக்களர் இடாப்பு சரியாக பதியப்படவில்லை. வேட்பாளர்கள் மீதும், அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் அச்சுறுத்தல்களும், வன்முறையும் ஏவப்பட்டுள்ளது. வாக்குகள் மோசடிக்குள்ளாக்குவதற்கான செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேவேளை, மக்களோ தேர்தலில் அக்கறையற்றுள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்ற சந்தர்பத்திலே, தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

மக்களின் விருப்பத்துக்கும், ஒழுக்க விதிகளுக்கும் எதிராக நடத்த இருக்கின்ற தேர்தலை ஜனநாயகரீதியான செயற்பாடென வரைவிலக்கணப்படுத்தலாமா?

தன்மானமுள்ள தமிழர்கள் மேற்கூறப்பட்டுள்ள வினாக்களுக்கான விடையை புரிந்து, அதற்கு அமைவாக, எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள உள்ள+ராட்சி சபைத் தேர்தலில் செயற்பட வேண்டும்.

எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள உள்ள+ராட்சி தே;தலில், யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை விட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தமிழ் வாக்களர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில், உங்களுடைய வாக்கு என்பது உங்கள் வாழ்வை மட்டுமல்ல, குறைந்நது உங்கள் ஒரு உறவினருடைய உயிரிரையாவது, காப்பாற்றும், பாதுகாக்கும்.

திருத்தங்களுடனான வாசிப்பிற்கு,

http://www.puthinam.com/full.php?2bdwD6NJa0bckFm0Xe0ec4F5du30cc3d6KsY34d33YQo424b40pTX8D4d4eRRH7lcd0ea4l5kBde

Friday, March 20, 2009

நெஞ்சைப் பிளந்து, இதயத்தைப் பிளிகின்ற சிறீ அண்ணாவின் வீரமரணத்தை மனதில் நிலைநிறுத்தி…



காதோரம் வந்த செய்தி பொய்யாகிப் போகாதோ…என்ற தாயகப் பாடல் எனக்கு தற்போது மிகப் பொருத்தமாகவே அமைகிறது.

“செய்தி அறிஞ்சனிங்களோ? சிறீ அண்ணா வீரச்சாவடைந்திட்டார்.” என மறுமுனையில் பேசியகுரல் ஓய்வதற்கிடையில், எனது இதயம் தகர்ந்து போவது போல் உணர்கிறேன். ஆம்! நான் மிக மிக ஆழமாக நேசித்த அரியதொரு மானுடப் பிறவியான, எனது உடன்பிறாவாச் சகோதரன் அண்ணன் சிறீ, எம்மை விட்டு, எமது தேசத்தை விட்டு, விடுதலை தீயை நெஞ்சில் சுமந்தபடி வீரகாவியமாகிவிட்டார்.

நினைவுக் குறிப்புகள் எழுதி சளைத்துப் போன என்னால், இவரது மரணத்தின் போது மட்டும் அமைதி காக்க முடியவில்லை. இழப்புக்கள் எனக்குப் புதியவையல்ல, சோகங்களும், வேதனைகளும் எனக்குப் தாங்கமுடியாதவையல்ல. ஆனால், சிறீ அண்ணனின் மரணம் என்பது என் மனம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக, என் மனதை வாட்டிவதைக்கின்றது. போரட்டமே வாழ்வாகி;ப் போன தமிழர்களின் வாழ்வில், இழப்புக்கள் நாம் விரும்பாவிட்டாலும் எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றாகNவு எமது வாழ்வியலோடு கலந்து விட்ட இத்தருணத்தில், எனது மனோதிடத்துக்கே சவால் விடுகின்ற ஒரு வீரச்சாவாக சிறீ அண்ணாவின் மரணம் சம்பபித்துவிட்டது.

சாவே மலிந்து போன என் தேசத்தில், இவனது வீரமரணம் மட்டும் எப்படி என்னை இப்படி உலுக்குகின்றது? நினைவுகளை மீட்கிறேன் காரணம் தேடி.

தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஊடவியலாளர் மாநாட்டு செய்தி சேகரிப்புக்குச் சென்ற நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக வன்னிக்கு சென்றபோது, ஏப்ரல் 8, 2002ல் எதிர்பாரதவிதமாக சிறீ அண்ணாவுடனான சந்திப்பு இடம்பெற்றது. ஊடகவியலாளர்களின் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து அவற்றை ப+ர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சிறீ அண்ணாவை பார்க்கும் எவரும், வியப்பை ஆழ்த்தும் ஒரு செயற்பாட்டாளனாகவே அவரை அடையாளப்படுத்துவார்கள். சுடுகலன்களை ஏந்திய போராளிகளை பார்த்தும் அறிந்தும் பழகிப் போன எனக்கு, சிறீ அண்ணனை ஒரு போராளியாக எண்ணிப் பார்க்க முடிந்திருக்கவில்லை. ஊடகவியலாளர் சந்திப்பு ஏப்ரல் 10, 2002 நிறைவுபெற, நானும் வன்னிமண்ணிலிருந்து விடைபெற வேண்டிய நேரம் நெருங்குகிறது.

“ஹலோ பிரதர்” என்ற அழைப்பைக் கேட்டு திரும்பிப் பார்க்கிறேன். புன்முறுவலுடன் சிறீ அண்ணா. “நான் வெளிக்கிடப் போறன், சொல்லிப் போட்டு போவம் எண்டு வந்தனான்” எனக் கூறியவாறு பாக்கர் பேனா ஒன்றைத் அன்பளிப்பாக தந்தார். எழுத்துக்களால் எதனையும் சாதிக்க முடியும், “இந்தப் பேனாவை உங்கட ஆயுதமாக பாவித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கோ” எனக் கூறியபின், ஆதரவுடன் “கவனமாய் இருங்கோ” என கூறியபடி கைகுலுக்கி, கையசைத்து விடைபெறுகிறார்.

அதற்குப் பிற்பாடும் சில தடவைகள் தொடர்புகொள்ளக் கூடிய சந்தர்ப்பர் கிடைத்தது. சந்திக்கும் பொழுதுகளி;ல் பிரதானமாக எழுத்துஃ ஊடகச் செயற்பாடு, தகவல் தொழில்நுட்ப அறிவியல், கிரிக்கட் இவை தொடர்பாகவே எமது கலந்துரையாடல் அமைந்திருந்தது. பொதுவாகவே மென்மையான சுபாவமுடைய சிறீ அண்ணா எல்லோரிடத்திலும் நல்ல குணங்களையும் அவர்களிடமுள்ள திறமைகளையும் இனங்கண்டு அறிவதில் வல்லமை மிக்கவராக விளங்கினார்.

ஊடகப்பணி மீது அபரித பற்று வைத்திருந்த அண்ணன் சிறீ, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தன்னால் முடிந்தவரை கரிசனை செலுத்துவதை என்னால் அறியமுடிந்தது. எனது பேச்சுக்களும், எழுத்தும் சிங்கள கொலைவெறியர்களினதும், நயவஞ்சகர்களினதும் முகமூடியை வெளிப்படுத்துவதால், எனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எடுத்துக்கூறி ஆலோசனை வழங்குவதோடு ஆதரவுடன் கண்டிக்க தவறியதுமில்லை. நீண்ட நாளைக்குப் பிற்பாடு 2007 ன் நடுப்பகுதியில் அவரிடமிருந்து வந்த மடலில், மிகையொலி விமானங்களின் இரைச்சலாலும், குண்டுவீச்சுக்களாலும் சிறுவர்கள் உளரீதியாக பாதிக்கப்டுவது பற்றி மிகுந்ந கவலையுடன் எழுதியிருந்தார்.

பிற்பாடு, கடந்த டிசம்பர் 2008ல் தொடர்பு கொண்டபோது, தமிழ் தேசியப் போராட்டத்தை எவ்வாறு சர்வதேச அரசியலுக்கும், உருவாகி வரும் உலக ஒழுங்கிற்கும் ஏற்ப நகர்த்துவது என்பது தொடர்பாக உரையாடினார். நான் நெருக்கடி மிகுந்ததொரு காலகட்டத்தில் இருக்கிறேன் என அறிந்ததையடுத்து 2009, பெப்ரவரி 17ம் திகதி மீண்டும் தொடர்புகொண்டார். எனது உளஉரணை வலுப்படுத்தக்கூடிய வகையில் தைரியமூட்டிய பேச்சில், தானும், தான் சார்ந்த பணியும் எதிர்நோக்குகின்ற நெருக்கடியான சூழல் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை. வழக்கம் போல அவரது பேச்சில் ஒருவகை நகைச்சுவை கலந்திருந்ததோடு, உற்சாகமூட்டும் அவரது சிரிப்புக்கும் குறைவிருக்கவில்லை. அதேவேளை, ஒரு ஊடகவியலாளன் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு சாதகமான முறையில் சர்வதேச ரீதியாக என்னால் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார். எமது மக்கள் மீது சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப்படுகின்ற இனச்சுத்திகரிப்புப் போih சர்வதேச சமூகம் தெளிவாக புரியக்கூடிய மொழியில் எடுத்துச்செல்லப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான தொடர்பை எனக்கு ஏற்படுத்தி தருவதாக கூறிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி தொடர்பறுந்து போனது.

தொடர்பு மீண்டும் வரும் என நான் எதிர்பார்த்திருந்த போது, என்னுடன் கதைத்து சரியாக ஒரு மாதத்தில் அவர் வீரச்சாவடைந்து விட்டார் என்ற செய்திதான் எனக்கு வந்து சேர்ந்துள்ளது. எப்படித் தாங்கும் என் மனது? அழுவதைத் தவிர எனக்கு எதுவும் இப்போது செய்ய முடியவில்லை. ஆனால், பெரும்பாலான எல்லாமே என்னைவிட்டு போய்க்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், கண்ணீர் மட்டும் என்னை விட்டகல மறுக்கிறது. சிறீ அண்ணாவுடனான முற்றுப்பெறாத அந்த உரையாடல் நெஞ்சை நெருடுகிறது.

ஒரு தடவை நேரடியாகக் சந்தித்த போது சிறீ அண்ணா கூறினார், “நாளைக்கு நான் மரணமடையலாம், எனது இடம் இன்னொருவரால் நிரப்பப்படும். ஆனால், உங்கள் பணியில் எத்தகைய வெற்றிடமும் ஏற்படக்கூடாது. நீங்கள் உங்களுடைய பணியை தொடர்ச்சியாக செய்துகொண்டிருங்கோ” என. சிறீ அண்ணாவின் தொடர்பும் இடையில் நின்று போனது. தமிழீழ விடுதலை என்ற அவரது கனவு கைகூடும் முன்னர் எமது மக்களைவிட்டு அவர் உடல் ரீதியாகப் பிரிந்து விட்டார். சிறீ அண்ணாவின் கனவை எம்மால் முடிந்தவரை நனவாக்கக் கூடிய ஊடாகப்பணியை ஊடகவியலாளர்களான நாம் தீவிரமாக முன்னெடுப்பதற்கு திடசங்கற்பம் ப+ணுவோம்.

எமது மக்களின் சுதந்திரத்திற்காய், விடுதலையை தீயை மூட்டி, தாயக்கனவை நெஞ்சில் சுமந்த சிறீ அண்ணாவின் கனவு மெய்ப்படும் வரை ஏந்திய என் பேனா எழுதில் விழாது.

Labels:

Sunday, November 02, 2008

அம்மா...



ஒரு பிடி என் மண்பற்றி
உன் மடி மீது சாயவேண்டும்.

Labels:

???


உலகமே!


அழிப்பதற்கான ஆயுதம்
ஜனநாயகம் என்றால்
அதனை தடுப்பதற்கான
ஆயுதம் என்ன???

Friday, October 31, 2008

வரலாற்றை மாற்றிய வரலாறு…

Records from 26-10-2007 files

உலகிலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக விடுதலைப் புலிகளே உள்ளனர், அவர்களை போரின் மூலம் வெல்ல முடியாது என்று, இன மோதல்கள் தொடர்பான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெரார்ட் சாலியண்ட கருத்து தெரிவித்திருந்தார். ஜெரார்ட் சாலியண்ட “கள யதார்த்தம் தெரியாமல் பேசியுள்ளார்” என்று அதற்குப் பதிலடியாக பேசினார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய.

இருவடைய கருத்துக்களும் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் அனுராதபுர வானூர்தி தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான இருவழி அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி முடித்துவிட்டு , அடுத்த பெரும் தாக்குதலுக்கான இறுதிக் கட்ட திட்டமிடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனடிப்படையில் பார்க்கும் போது, சிறீலங்காவினுடைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவா அல்லது ஜெரார்ட் சாலியண்டா களயதார்தம் தெரியாமல் பேசியுள்ளனர் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிட்டு, அனுராத வானூர்தித் தளத்தின் மீதான எல்லாளன் நடவடிக்கைiயும், அதன் போரியல் பரிமாண போக்கையும், விடுதலைப் புலிகளின் “மௌன காப்பு” மற்றும் தாக்குதல் உணர்த்தும் சேதி போன்றவற்றையும் கீழே நோக்குவோம்.

இலங்கைத் தீவில் சிறீலங்காப் படைகளுக்கு சொந்தமாக ஐந்து பிரதான வானூர்தி தளங்கள் இரத்மலானை, பலாலி, சீனன்குடா, கட்டுநாயக்கா, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. இவற்றில் இரத்மலானை, கட்டுநாயக்கா ஆகிய வானூர்தித் தளங்கள் மேல் மாகாணத்திலமைந்துள்ளன. ஏனையவை வட-கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திலமைந்துள்ளன. இந்த வானூர்தித் தளங்கள் பரந்து இருப்பினும், மேற்கூறிய வானூர்தித் தளங்கள் ஐங்திலும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் அனைத்து தாக்குதல்களும் ஊடுருவி தாக்குதல்களாவே அமைந்துள்ளன. அந்த தாக்குதல்களை ஆராய்கின்ற போது, காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் தாக்குதல் திட்டங்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்வதையும், ஒவ்வொரு தாக்குதலின் பின்னரும் விடுதலைப் புலிகளின் படிநிலை வளர்ச்சியடைவதையும் காணமுடிகிறது.

வானுர்தி தளம் மீதான முதலாவது தாக்குதல் 1980களின் நடுப்பகுதியில் இரத்மலானை வானூர்தித் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த அவ்ரோ வானுர்தியை குண்டுவைத்து தகர்த்ததுடன் ஆரம்பமானது. லெப் கேணல்: ராதவே அந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாயகம் திரும்பியிருந்தார். அதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு பிரிவுக்கு ராதா வானூர்தி எதிர்ப்பு படையணி என்ற பெயர் சூட்டப்பட்டது.

இரண்டாவது தாக்குதல் 1990களின் ஆரம்பத்தில் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது.; முற்று முழுதான வெற்றியை குறித்த தாக்குதல் அளிக்கவில்லையாயினும் பின்னர் இடம்பெற்ற வெற்றிகராமான தாக்குதல்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்கியிருந்தது. 1991ல் இடம்பெற்ற ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல் வெளிச்(ஆ.க.வெ)சமரில் ஏற்பட்ட பின்னடைவினூடாகப் பெறப்பட்ட அனுபவம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு எப்படி வழிகோலியதோ, அது போன்ற ஒரு தாக்குதலாகவே பலாலி படைத்தளம் மீதான தாக்குதலும் அமைந்திருந்ததெனலாம். இந்த தாக்குலில் கெனடி தலைமையிலான சுமார் 15 கரும்புலிகள் பங்குபற்றியதாக நம்பப்படுகிறது.

ஒரு தாக்குதலின் வெற்றியிலிருந்து பெறப்படும்; அனுபவத்திலும் பார்க்க தோல்வியிலிருந்து கிடைக்கும் அனுபவங்கள் கனதியானவையும் பயன்மிக்கவையும் ஆகும். அதனை சரிவர பயன்படுத்துவதனூடாக தமது தரப்பின் எதிர்கால தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியும் என்பது சாத்தியமானது. இதனை விடுதலைப் புலிகள் நிரூபித்து காட்டியுள்ளார்கள்.

மூன்றாவது தாக்குதல் திருகோணமலையிலமைந்துள்ள சீனன்குடா விமானப் படைத்தளம் மீது 1997 மார்ச் 5ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அந்த வெற்றிகரமான தாக்குதலின் மூலம் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் சில வானூர்திகள் பாரிய சேதத்திற்குள்ளாகினா. ஆந்த தாக்குதலினூடாக சிறிலங்கா விமானப்படைக்கு சுமார் 125 மில்லியன் ந~;டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தது. அந்த தாக்குதலின் போதும் விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்பு கணிப்பிடப்பட்டவற்றிலும் பார்க்க அதிகமானது என அன்றைய எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தது. குறித்த தாக்குலின் போது விடுதலைப் புலிகள் வித்தியாசமான உத்தியை கையாண்டார்கள். அதாவது தமது அணிகள் வானுர்தி தளத்துக்குள் ஊடுருவ முன்னர் வானுர்தி தளம் மீது மோட்டார் குண்டு மழை பொழிந்தார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து படையினர் மீள்வதற்கிடையில், சுமார் 15பேர் கொண்ட கரும்புலி அணி தனது பாய்ச்சலை காட்டியது. இதில் மேஜர் சிற்றம்பலம், கப்டன் நிவிதன், கப்டன் விஜயரூபன் ஆகிய போராளிகள் வீரச்சாவை அணைத்தார்கள் என அன்றைய காலப்பகுதியில் சண்டேரைம்ஸ் செய்தி வெளியிட்ருந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க தாக்குதல்களில் ஒன்றான நான்காவது தாக்குதல் கட்டுநாயக்கா வானூர்தி தளம் மீது மேற்கொள்ளப்பட்டது. 2001 ய+லை 24ம் திகதி அதிகாலை 3.50 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சுமார் இரு மணிநேரம் தீவிரமாக இடம்பெற்றது. இதனூடாக சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட இழப்பு சிறீலங்கா விமானப்படைக்கு ஏற்பட்டது. சிறீலங்கா அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டு வரவும், உலகம் தமிழர்களின் போரியல் பலத்தை அறியவும் இந்த தாக்குதல் வழியமைத்தது. உலகத்தின் கண்களை திகைப்பில் ஆழ்த்தி, அன்றைய ஆட்சியாளர்களை நிலைகுலைய வைத்து, முப்படையையும் அதிர்ச்சியில் உறைய வைத்து, பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்த அந்த தாக்குதலை 700 ஏக்கர் நிலப்பரப்புக்குள் நின்றபடி சுமார் 15 போராளிகள் மேற்கொண்டிருந்தனர். இந்த கீர்த்தி மிகு தாக்குலில் வீரச்சாவை அணைத்துக் கொண்ட ஒரு மாவீரனின் தாய், குறித்த தாக்குதலுக்கான வேவு அணியில் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“றிவிரச”, “சத்ஜெய”, “எடிபல” இராணுவ நடவடிக்ககைகளுக்கு பிற்பாடு,
விடுதலைப் புலிகளின் கதை இன்னும் 4 மாதத்துக்குள் முடிவுக்கு வரப்போகிறது என கேணல் ரத்வத்தை காலவரையறை செய்ய, ஓயாத அலைகளாய் எழுந்த புலிகள் இறுதியில் சீனன்குடா வானூர்தி தளத்தில் அதிரடியை நிகழ்த்தினார்கள்.

வன்னிக்குள் புலிகளை துண்டாடி ஏ- 9 பாதையை படையினரின் போக்குவரத்திற்காக திறக்க முனைந்த “ஜயசிக்குறுவின்” முதுகெலும்பை முறித்து கட்டுநாயக்காவின் நெஞ்சில் ஏறி மிதித்து மக்களின் போக்குவரத்திற்காய் பாதையை திறந்து விட்டனர் புலிகள்.

கிழக்கினை சிங்கள மயப்படுத்தும் நோக்குடன், அதனை ஆக்கிரமித்த பின் “ புலிகளை கிழக்கிலிருந்து முற்றாக விரட்டியடித்து, கிழக்கினை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து விட்டதாக” சிங்களம் கொக்கரித்த போது விடுலைப் புலிகளின் சிறப்பு கரும்புலிகள் அதன் கழுத்தை நெரித்து கொட்டத்தை அடக்கியுள்ளனர்.

ஈகமும் வீரமும் தீவிரமமும் நிறைந்த இந்த தாக்குதல் 2007 ஒக்டோபர் 22ம் திகதி அதிகாலை 3.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இதில் 21 சிறப்பு கரும்புலிகள் வீரச்சாவை அணைத்துள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சியன் கணக்குப் படி 18ற்கு மேற்பட்ட வானுர்திகள் அழிக்கப்பட்டுள்ளது. சுமார் 660 கோடி ரூபா ந~;டம் விமானப் படைக்கு ஏற்பட்டுள்ளது.

இறுதியாக கிடைத்;த தகவலின்படி 21 வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதனையுமே விடுலைப் புலிகளின் சிறப்பு கரும்புலிகள் விட்டு வைக்கவில்லை. அங்கிருந்த அனைத்து விமானங்களும் அழிக்கப்பட்ட பின்பு மறைவில் நிறுத்தப்பட்டிருந்த யுஏவி உளவு விமானத்தை தேடிக்கண்டு பிடித்து அழிக்கும் நிலையில் புலிகளின் மேலாண்மை அந்த தாக்குதலில் நிலவியது. இதனை ஆழமாக அலசும் போது இந்த தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை ஆரம்பத்திலிருந்து தாக்குதல் மேற்கொள்வதற்கான இறுதி நிமிடம் வரை துல்லியமாக சேகரிக்கப்பட்டு;ளது. அதனூடவே அதிகளாவான வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நாளும் கணக்கிலெடுக்கப்பட்டுள்ளது.
பலாலி கூட்டுப்படைத் தளம் மீதான தாக்குதலினூடாக முகாமாலையிலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதோ, அதேபோல் மன்னார் மாவட்டத்திலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் எல்லாளன் நடவடிக்கை மூலம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

போரியல் உபாயத்தின் படி இருவகையான தாக்குதல்களை மேற்கொள்;வதே ஒப்பீட்டளவில் சாதகமானது. ஓன்றில் எதிரி எம்மை நோக்கி முன்Nனுறும் முன் அவனது கோட்டைக்குள் புகுந்து அவனது கட்டமைப்புகளை சிதறடித்து தாக்குதலுக்கு தயார்படுத்திய திட்டங்களை சிதைத்தல். இரண்டாவது எதிரியை எமது நிலப்பரப்புக்குள் அகல கால் பதிக்க வைத்துவிட்டு தருணம் பார்த்து சுற்றிவளைத்து அல்லது ஊடறுத்து அதிரடி தாக்குதலை திடீரென மேற்கொண்டு அவனை நிலைகுலைய வைத்தல். அனுராதபுர வான்படைத் தளம் மீதான தாக்குதலை முதலாவதிற்கான அண்மைக்கால உதாரணமாகக் குறிப்பிடலாம். இரண்டாவதிற்கான சிறந்த உதாரணமாக “ஜெயசிக்குறு” படையினர் மீதான ஓயாத அலை-3 ஆக்ரோசத்தை குறிப்பிடலாம். எமது தரப்பு மேலாண்மையை நிலைநிறுத்துவதற்கு தற்காப்பு சமரைவிட தாக்குதல் சமர் புரிவதே சிறந்த மார்க்கம் என போரியல் மரபுகளுடாக அறியமுடிகிறது. ஆயினும் தற்காப்பு சமரில் ஆரம்பித்து அதனையே தாக்குதல் சமராக மாற்றக்கூடிய வல்லமை இருக்குமாயின் களமுனையில் கையோங்கியவர்களாக நாமே இருப்போம். அத்துடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு எதிரிக்கு நீண்டகால அவகாசம் தேவைப்படும். கூடவே எதிரியின் மனோபலம் இலகுவில் கட்டியெழுப்பப்படாதபடி சிதைக்கப்பட்டு விடும். பிரகடனப்படுத்தப்படாத ஈழப்போர்- 4 ல் 2006, ஒக்டோபர் 14ம் திகதி முகமாலை-பளை களமுனையில் இது தான் நடந்தது. அதாவது தற்காப்பு நிலையிலிருந்த புலிகள் குறுகிய நேரத்துக்குள் தாக்குதல் தரப்பினராக மாறினார்கள். கேணல் ஹரிகரனின் மொழியில் அதன் விளைவை கூறுவதாயின் “தன் தலையை மலையோடு கொண்டு சென்று மோதியது” சிங்கள இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் படைகள்.


கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட “எல்லாளன் நடவடிக்கையினூடாக” வன்னி நோக்கிய படைநகர்வு மட்டும் தாமதிக்கவில்லை. மாறாக சிறீலங்காப் படைகள் தொடர்பான படைவலிமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் முப்படைகளுக்கும் ஆட்களை சேர்த்துக் கொள்ளமுடியும். வட்டிக்கு கடன் வாங்கி, பொதுமக்களின வாழ்க்கை செலவை உயர்த்தி; அவர்களின் வயிற்றில் அடிப்பதனூடாக நவீனரக ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்ய முடியும். ஆனால் மனோபலத்தை கட்டியெழுப்புதல் என்பது மிகச் சவாலான விடயம். சிறீலங்காப் படைத்துறை வரலாற்றில் ஆட்பலத்தையும், ஆயுத தளபாடங்களையும் கட்டியெழுப்புவதில் காட்டப்பட்ட அக்கறை மனோபலத்தை கட்டியெழுப்புவதில் காட்டப்படவில்லை. ஆனால், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மூன்று விடயங்களிலும் உரிய அக்கறை செலுத்துவதில் குறியாய் இருந்து வருகின்றனர் என்பது அவர்களுடைய செயல்பாடுகளை தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் அவதானிக்கும் போது தெரிகிறது.

தென்னிலங்கையில் கிழக்கு புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களின் மூலம் ஊதிப் பொருப்பிக்கப்பட்ட வெற்றி சிந்திப்பு தன்மையற்ற சிங்கள மக்களை உற்சாகப்படுத்தியதில் பாதியை கூட களமுனையில் நின்ற படையினரிடம் உண்டுபண்ணவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் சாதித்து வந்த மௌனம் தமிழ் மக்களினுடைய மனங்களில் குழப்பத்தை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியதே தவிர போராளிகளிடம் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், போராளிகளின் மனோபலத்தை பேணுவதில் அதன் தலைமை, தொடர்ச்சியாக அதிக கவனம் செலுத்தி வந்தமையே ஆகும். அதனூடவே எந்த இடத்திலும் நினைத்த வேளையில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறார்கள். அத்துடன் ஒழுக்கப்பண்பையும் பேணுவதில் குறிப்பாகவுள்ளனர். ஆனால், இரண்டும்கெட்டான் நிலையிலேயே சிங்களப்படைகள் உள்ளது. இல்லையெனில், சிங்கத்தின் கோட்டைக்குள் புகுந்து துவம்வம் செய்த போது, எந்தவித முறியடிப்பு தாக்குதலுக்கும் திரணியற்றவர்கள், தாக்குலில் வீரமரணமடைந்த மாவீரர்களின் உடலை நிர்வாணமாக்கி மக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களா? போரியல் மரபுக்கும், உலக நியதிக்கும் எதிரான விடயத்தை சிங்களப் படைகள் மீண்டுமொருமுறை செய்திருக்கின்றன.

இந்தவிடத்தில் குறிப்பிடப் பட வேண்டிய இன்னொரு விடயம் யாதெனில், தமிழ் மக்கள் தேவையற்று இனி மேலும் போலி ஊடாகப் பரப்புரைகளால் மனம் சஞ்சலப்டக்கூடாது. பின்னடைவுகளின் போது தாமும் சோர்வடையாமல் போராளிகளை உற்சாகப்படுத்திய மக்கள் கூட்டமே தேசவிடுதலையை அடையமுடியும்.

ஆகமொத்தத்தில், எல்லாளன் நடவடிக்கiயானது, சிறீலங்காப் படைகளின் போரிடும் வலிமையை மீண்டுமொருமுறை சிதைத்து, பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து, தமிழர்களின் படைபலத்தையும் ஒரு கட்டமைக்கப்பட்ட படையமைப்புக் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கிய பண்புகளையும், அதனூடக ஏற்படும் விளைவுகளையும் வெளிப்படுத்தி நிற்பதோடு, எதிர்காலப் போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதிக்கம் மேலோங்கப் போவதையும் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறது.

சிவஒளி

கட்டுநாயக்கா சுட்டிக் காட்டுகிறது விட்டு விடுதலையாகுவோம் நாமென்று.

Records from 29-03-2007 files

தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்திலே சிந்திய இரத்தத்துக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கடும் குளிருக்குள் தங்கள் குருதியை உறைய வைத்து ஆற்றிய பணிக்குமான “முதற் கட்ட அறுவடை” மிகச் சிறப்பான முறையில் நிறைவேறியுள்ளது.

போராளிகள் மக்கள் என்னும் சமுத்திரத்துக்குள் நீந்தும் மீன்கள் என்பது பொருத்தமான நேரத்தில் புலனாகியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது.

புலிகளினுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற “இக்கட்டு சிந்தனை” சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிகள் எதிர்பார்த்த முதலாவது அடித்தள் வெற்றியே பல்வேறு தரப்பினரிடமும் உண்டான “இக்கட்டு சிந்தனை” தான். ஏனெனில், எந்த ஒரு போரிலும் எமது பலவீனத்தiயும் எதிரியின் பலத்தையும் பகுப்பாய்வு செய்வதென்பது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நியதியாகும்.

தாக்குதலுக்கு முந்திய பகுப்பாய்வு வேவுத் தகவல்களிலேயே தங்கியுள்ளது. வேவு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பான வகையில் அமையுமாயின் முழு அளவிலான போரின் ஆரம்பமே அஸ்தமனத்தை நோக்கியதாகவே அமையும்.

வேவுத் தகவல் சேகரிப்பின் ஆக்கபூர்வ அமைவாக்கம் என்பது நுண்ணியதும் நுட்பமானதுமான தரவு சேகரிப்பில் தங்கியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டே தாக்குதல் திட்டங்கள் தீட்டப்படுவது வழமை. ஆகவே ஒரு தரப்பு தனது எதியின் தாக்குதல் திட்டத்திற்கு அடிப்படையான வேவுத்தகவல் சேகரிப்பை குழப்பி விடுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயற்படும். அதனூடக எதிரியின் தாக்குதல் திட்டத்தை முறியடிப்பது இலகு.

அதனைத்தான் (“இக்கட்டு சிந்தனை”) இலங்கைத் தீவினுடைய போராட்ட களத்தில் புலிப் போராளிகள் திட்ட மிட்டு மேற்கொண்டனர். புலிகளினுடைய இந்தப் பாணி ஒன்றும் புதியதல்ல ஆனால் அதன் வடிவம் புரிய கடினமானது. மூன்று தசாப்த காலத்தில் ஒருமுறை கூட புலிகளினுடைய இக்கட்டு சிந்தனை உண்டாக்கத்தை சிறீலங்கா அரசாலோ அன்றேல் அவர்களது படையினராலோ சரிவர கணிப்பிடமுடியாமை என்பதுவும் புலிகளுடைய வெற்றிகளுக்கான காரணங்களிலொன்றாகக் காணப்படுகிறது. வீரதுங்கா, அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேயரட்ண, அனுருத்த ரத்வத்த போன்றோர் எவ்வாறு புலிகளால் ஏமாற்றப்பட்டார்களோ அதுதான் இன்று கோத்தஅபய ராஜபக்சவுக்கும் நடக்கிறது.

இந்த உபாயம்தான் புலிகளினுடைய தந்திரோபாய வெற்றியாவும் சிங்களத்தின் தோல்வியாகவும் கொள்கைவகுப்பாளர்களால் கருதப்படுகிறது. இருப்பினும் சிங்களப் பேரினவாதம் இன்னும் தனது தவறுகளை நிவர்த்தி செய்ய யோசிக்காமல் தொடர்ந்தும் கனவுலகிலும் மாஜையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தான் மட்டும் இன்றி தனது மக்களையும் அவ்வாறே வாழத் தூண்டுகிறது.

இது போன்ற நிலையே “இறுதிப்போருக்கான நுழைவாயிலை” புலிகள் வெற்றிகரமாக திறப்பதற்கு துணைநின்றது. இந்த துணைநிற்றலின் தோற்றுவாயென்பது புலிகளால் உண்டாக்கப்பட்டதென்பதுதான் சிங்கள பேரினவாதத்துக்கு அச்சத்தை, அதிர்ச்சியை, ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. மேற்கூறிய மூன்று அம்சங்களும் என்றைக்குமே நிதானமாவும் புத்திசாதுர்யமாகவும் சிந்திக்க விடாது. நிதானமாவும் புத்திசாதுர்யமும் அற்ற சிந்தனையென்பது புதைகுழி நோக்கிய பயணமாகவே இருக்கும். இதனுடைய மறுதலை யாதெனில், தமிழர்களுடைய தளை நீக்கத்துக்கான போராட்டத்தின் விரைவு நிலையாகும்.

இந்த அடிப்படையிலேயே, கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது கடந்த மார்ச் 26ம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் தமிழீழ வான் புலிகள் ( வுயஅடை நுநடய யுசை வுபைநசள- வுநுயுவு) அல்லது தமிழீழ வான்; படையினர் ( வுயஅடை நுநடய யுசை குழசஉந- வுநுயுகு) நடத்திய அதிர்ச்சி மிகுந்த அதிரடித் தாக்குதலை நோக்குதல் பயன்மிக்கதாக அமையும்.

வான் புலிகளின் தோற்றம்.

தமிழீழ விடுதலை புலிகளிடம் வான் படைப் பிரிவும் உள்ளதென்பது 1998 ம் ஆண்டிலேயே தெரியவந்தது. 1998-11-27 மாவீரர் தினத்தன்று முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ வான் படையினரின் வானுர்தி;கள் மாவீரருக்கு மலர்தூவி அஞ்சலி செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. வான்புலிகளின் வளர்ச்சியில் கேணல் சங்கர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இவர் விமானப் பறப்பு தொடர்பான பயிற்சியையும் வான்படை உருவாக்கத்திற்கான படிப்;பையும் கனாடாவில் பெற்றதாக ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ வான்படையின் விமானங்கள் வடக்கு வான்பரப்பில் பலதடவை பறந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. விடுதலைப் புலிகளிடம் இலகு ரக விமானங்கள் இருப்பதென்பதை சிறீலங்கா படைகளின் உளவு விமானமான ருயுஏ படம் பிடித்திருந்த போதும் சுனாமி அனர்தத்தை தொடர்ந்து நிவாரணப் பணியென்ற போர்வையில் வந்த சில நாட்டின் பிரதிநிகளினாலேயே அது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் ஓரு தாக்குதல் இடம்பெற்று முடிந்த பின்னரும் கூட வான் புலிகளிடம் எந்த ரக விமானம் உள்ளதென்பதை யாரும் திட்டட்டமாகக் கூறவில்லை.

ZLIN Z- 143 அல்லது சுவிஸ் தயாரிப்பான பிளற்ரஸ் PC-7 அல்லது PC 21 இருக்கக் கூடுமென கருதப்படுகிறது. விமானப் பறப்புக்கான பயிற்சிகளை வான் புலிகள் கனடாவிலும் சுவிஸிலும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சுமார் 1250 மீற்றர் நீளமான விமான ஓடு பாதை இரணைமடுவிலும், புதுக்குடியிருப்புக்கு அண்மித்த பிரதேசத்திலும் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை இனங்கண்ட சிறீலங்கா விமானப் படை விமான ஓடுபாதையை வெற்றிகரமாகத் தாக்கி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வான்புலிகளின் தாக்குதலானது சிறீலங்கா விமானப் படையின் கூற்று பொய்யென நிரூபித்துள்ளது.

(இதனூடக பிரபாகரன் அவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் வான்படை கூட கதை முடிந்ததென்று சொன்ன பின்னர் மறுபிறப்பெடுக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது. ஆனால் வன்னியல் சிரஞ்சீவி மலை இருப்பதாகத் தெரியவில்லை.)

புலிகளைப் பொறுத்தவரை ஒரு மாதிரி போதும் பல அசல்களை உருவாக்க. தொழிட்நுட்ப ரீதியாக சிறப்பு நிலையடைந்தவர்கள்; கணிசமான தொகையினர் அவர்களிடம உள்ளனர். இவ்வாறானவர்களின் அர்ப்பணிப்பே ஜொனி மிதிவெடியாக, அருள் 81 மோட்டாராக, பசீலன் எறிகணையாக கடந்த காலத்தில் வெளிப்பட்டிருந்தது. சிறப்பத் தேர்ச்சி அடைந்தவர்களைக் கொண்ட புலிகளின் தொழில்நுட்பப் பிரிவினூடாக எதிர் காலத்தில் வானுர்திகளை உற்பத்தி செய்யக் கூடிய சாத்தியப்பாடுகளும் தென்படுகின்றன.

கொழும்பிலுள்ள நண்பர் ஒருவருடன் தொடர்பு கொண்டு வான் புலிகளின் தாக்குதல் தொடர்பாகக் கேட்ட போது பின்வருமாறு குறிப்பிட்டார்.” ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை அவர்களின் மகனால் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு தலைவலி இருந்து வந்தது. ஆனால், இனிமேல் பிரபாகரன் அவர்களின் மகனும் தென்னிலங்கைக்கு தலைவலியாக இருக்கத் தொடங்கி விட்டார்” என்பதே விமானத் தாக்குதல் சொல்லும் ஒரு சேதியாகும் எனக் குறிப்பிட்டார்.

வானுயர்ந்த புலிவீரம்

தற்கொலைத் தாக்கதல்களுக்கே புலிகள் விமானங்களை பயன்படுத்துவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், புலிகளோ தமது விமானங்களை அதிரடி நடவடிக்கைக்கு பயன்படுத்தியதுடன் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளார்கள. அதுவும் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள். இதிலுள்ள விசேட அம்சம் யாதெனில் ,

1. சிறீலங்காப் படையினரின் ராடர் கருவிகளுக்குள் சிக்காமல் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள்.

2. மின்குமிழ்களை ஒளிர விடாமல் பறப்பிலீடுபட்டனர்.

3. நடுநிசிப் பொழுதிலும் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள்.

4. புவியியல் அமைவுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் புத்தளம், வில்பத்து போன்ற பகுதிகளில் மரங்களோடு உரசுவது போல் வானுர்திகளை செலுத்தியுள்ளார்கள்.

மேற்கூறப்பட்டது போன்ற விசேட அம்சங்கள் சிறீலங்கா விமானப் படையினராலேயே இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கையில் வான்புலிகள் தமது திறமையை தமது நுழைவுத் தாக்குதலினூடாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வான் தாக்குதலின் நோக்கம்

மேற்குறிப்பிட்ட தாக்குதலானது தமிழர்களுக்கான தனியரசு என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் குறைந்தது ஐந்து குறிக்கோள்களை அடைவிலக்காகக் கொண்டிருக்கலாம். அவையாவன,

1. சிறீலங்கா விமானப் படையின் தாக்குதல் விமானங்களின் பலத்தையும் அதன் தொடர்பாடல் திறனையும் இயன்றவரை வலுவிழக்கச் செய்தல.

2. உளவியற் போரூடாக சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் மனோரீதியான தாக்கத்தை உண்டுபண்ணல்.

3. சிறீலங்காப் படைகளின் மையக் கவனத்தை சிதறடித்தல் அல்லது திசைதிருப்பல்.4. தமிழ் மக்களுக்கு தென்பூட்டல்

5. புலிகளின் பலத்தை நிரூபிப்பதனூடாக இராணுவ வலுச் சமநிலையின் உண்மை நிலையை வெளிப்படுத்தல்

6. புலிகளென்றால் யாரேன்பதை சிங்கள மக்கள், சிங்கள பேரினவாத அரசு மற்றும் சர்வதேச சமூகத்துக்கு புரியவைத்தல்.

அத்துடன், சிறீலங்கா விமானப் படையினின் தளத்துக்கு அருகிலே இருந்த சிவில் விமானத் தளத்துக்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமை புலிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு இக்கட்டு நிலையை உண்டுபண்ணியுள்ளது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டு நிலை

சுமார் 270 நாட்களாக தாம் ஈட்டிய வெற்றியென அரசினால் காண்பிக்கப்பட்ட வெற்றிப் பெருமிதங்கள், மார்தட்டல்கள், கர்ச்சனைகள் போன்றவை எல்லாவற்றமையுமே சில வினாடிகளுக்கள் வீழ்ந்த மூன்று குண்டுகள் சிதறடித்துள்ளன. அரசு கூறுது போல் உண்மையிலேயே சிறீலங்கா வான்படையினருக்கு இழப்புகள் இல்லையாயின் ஏன் ஊடகவியலாளர்கள், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை? வாகரையிலும் சம்பூரிலும் தாம் வெற்றி பெற்றதாகக் கூறி அதனை காட்டுவதற்காக ஊடகவியலாளர்களை பாதுகாப்பற்றதும் தொலைவிலுள்ளதுமான பகுதிக்கு அழைத்து சென்ற அரசாங்த்தால் ஏன் கட்டுநாயக்காவிற்கு கூட்டிச் சென்று நடந்தது இதுதான் என விபரிக்க முடியவில்ல? இராஜதந்திரிகளையே கிழக்கு மாகாணத்திற்கு கூட்டிச் சென்றவர்கள் ஏன் கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க வானுர்தி தளத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டதைத் தடுத்தி நிறுத்தினார்கள்.

சரி, மேற்கூறியவற்றிற்கு அப்பால், ஊடகவியலாளர்களால் தேசிய நலுனுக்கு ஆபத்து என்றால், புலிகளின் கப்பல்களை கடலில் மூழ்கடித்ததாக தெரிவித்து கடற்படையினரால் எடுக்கப்பட்டவை எனக் கூறி புகைப்படங்களை வெளியிடுவது போல், புலிகளின் தாக்குதல்களால் என்ன நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒரிரு புகைப்படங்களைக் கூட ஏன் வெளியிடப்படவில்லை?

இவையெல்லாவற்றிற்குமான விடை யாதெனில், அரசாங்கம் உண்மை வெளிவருவதை விரும்பவில்லையென்ற முடிவுக்கு சாதாரண மக்களை இட்டுச் செல்கிறது. அந்த உண்மைக்குள் அர்த்தம் பொதிந்த சேதி புதைந்துள்ளது. அது அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியை கொடுக்கும். அதற்காக பிரஜைகள் தமது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு இருக்கும் உரிமையை பொறுப்புள்ள அரசாங்கங்களால் மறுக்க முடியாது.
இந்தியாவினால் வழங்கப்ட்ட றேடர்கள் சரியாக செயற்படவில்லையென கூறி தமக்குள்ள பொறுப்பிலிருந்து பொறுப்பானவர்கள் நழுவ முடியாது. ஒரு நாட்டின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையொன்று இடம்பெறுமாயின் உடனடியாகவே அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது செயலாளரோ பதவி விலகுவது உலக வழக்கம். இலங்கை உலக வழக்கத்தை பின்பற்றுகின்ற நாடெனில் யார் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லையென்பதை ஏற்றுக்கொண்டு பதவி விலகப் போகிறார்கள்?

இந்தியாவில் ஒரு ரயில் விபத்து இடம்பெற்றதற்கே அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் 24 மணி நேரத்துக்குள் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் வான்புலிகளின் பாய்ச்சல்

இரட்டைக் கோபுரம் மற்றும் பென்ரகள் மீதான செப்டெம்பர் 11 வான் தாக்குதல், ஈராக் மீதான அமெரிக்க சார்பு படைகளின் வான் தாக்குதல், லெபனான் மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் ஆகியவற்றுக்கு அண்மித்ததான முக்கியத்துவம் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தமிழீழ வான் புலிகளின் தாக்குதலுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

பிபிசி, சிஎன்என்,அல்ஜசீரா, வசிங்டன் போஸ்ட், த ஏஜ், ரைம்ஸ் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஊடகங்கள் உலக வரலாற்றில் புரட்சிப் படையொன்றினால் நடத்ப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவென்றும், தாக்குதல் முறைமையானது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டுபண்ணியுள்ளது என்ற தொனியிலேயே செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்த தாக்குதல் சர்வதேச ரீதியில் புலிகளுக்கு பெரும் புகழ்மிகு பிரச்சாரத்தை வழங்கியிருந்ததை சிறீலங்கா அரசாங்ம் கூட மனதளவிலாவது உணர்ந்து கொண்டிருக்கும்.

தனியரசுக்கு தேவையான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு விடுதலை அமைப்பு தமிழர் தேசத்திலேயே உறுதியாகக் கால் பதித்து நிமிர்ந்து நிற்கிறது. விடுதலை அமைப்பு என்னும் பொழுது தனித்து இராணுவக் கட்டமைப்போடு மட்டும் நின்று விடாமல் சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளான காவல்துறை, நிதித் துறை, நீதி நிர்வாகத் துறை போன்ற துறைகளை முதன்முதலில் நிறுவி சிறப்பாக பேணிவரும் விடுதலைப் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்றும் அத்துடன் அவர்களிடம் மட்டுமே கடற்படையும் வான்படையும் உண்டென்பதுவும் மேற்கூறிய ஊடகங்களால் கூறப்பட்டிருந்தமை நினைவுகூரத் தக்கது.

பொருளாதாரத்திற்கு வீழ்ந்த அடி

தமிழீழ வான் புலிகளின் தாக்குதலானது பொருளாதார இலக்கொன்று தாக்கப்படும் முன்னரேயே சிறீலங்காவின் பொருளாதாரத்தை பாதாளத்தை நோக்கி தட்டி விட்டிருக்கிறது. பொருளாதாரமே ஒரு நாட்டின் உயிர்நாடி என்ற வகையில் சிறீலங்கா அரசாங்கம் அதனை முன்னேற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்துள்ளது. இதனூடாக உல்லாசத் துறை, பங்குச் சந்தை என்பனவற்றில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நியுஸீலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்வதை இயன்றவரை தவிர்க்கும் படி தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவறுத்தியுள்ளன.

அத்துடன், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதோடு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி கிடைப்பதில் தேக்க நிலை ஏற்படக் கூடிய ஆபத்துக்களும் உண்டு. இதனூடாக பொருளாதாரம் வீழ்ச்சியடைவதோடு மக்களின் வாழ்கைச் செலவு அதிகரிக்கும்.

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலா?

அரசாங்த்தாலும் அதன் பரிவாரங்களாலும் கூறப்படுவது போல் இது பயங்கரவாத் தாக்குலில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறுமுடியும். ஐ.நா உள்ளிட்ட சர்சதேச சமூகம் தாக்குதல் இடம்பெற்று சுமார் 72 மணிநேரம் கழிந்த நிலையிலும் தாக்குதல் தொடர்பான கண்டனத்தை தெரிவிக்காமை என்பது புலிகளினுடைய தாக்கதலுக்கான நியாயத்தை புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள் என எதிர்பார்க்க முடியும். பயங்கரவாத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா கூட சுமார் 72 மணிநேரமாகியும் கருத்தெதனையும் தெரிவிக்காமை, அவர்கள் பயங்கரவாத செயற்பாட்டிற்கும் விடுதலைப் போராட்டத்திற்குமிடையிலான வேறுபாட்டை அறிந்துள்ளார்கள் என்பதை அறிகுறியாகக் கொள்ளமுடியும்.

அரசாங்கம் தனக்கு ஏற்படவுள்ள பேராபத்தை சிந்திக்காமல் ஏன் அவசரப்பட்டு தென் ஆசியாவுக்கே புலிகளின் விமானப் படையால் ஆபத்து என அலட்டிக் கொள்கிறது? இது வான் புலிகளை தம்மால் தனித்து நின்று எதிர்க்க திரணியற்றதை வெளிப்படுத்துகிறது.

அரசாங்கம் போகிற போக்கில் வான் புலிகளின் விமானம் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டு ஈராக்கில் எண்ணெயை மீள் நிரப்பிவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டு தனது பயங்கரவாத கோசத்துக்கு வலுச் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அத்துடன் முன்னாள் றோ அதிகரியும் தற்போதைய அரசியல் இராணுவ ஆய்வாளருமான பி.ராமன் குறிப்பிடுவது போல் வான்புலிகளால் தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. தமிழீழ வீடுதலைப் புலிகளோடு ஏனைய எந்த இயக்கங்களையும் ஒப்பிடமுடியாது. ஏனெனில் புலிகளின் கட்டமைப்பும் அவர்களுடைய பரிமாண வளர்ச்சியும் யாருடனும் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதது. அப்படியிருக்கையில் உல்பா மற்றும் அசாம் இயக்கங்களை புலிகளின் வல்லமை, நுட்பங்களுடன் ஒப்பிட முடியாது. உல்பா மற்றும் அசாம் இயக்கங்களுக்கு ஒரு விமான தளத்தை அமைத்து பேணிப்பாதுகாக்க முடியுமா என்பது கேள்விக்குறியான விடயமே. ஏனெனில் அவர்களுடைய தளங்கள் பெரும்பாலம் நகரும் தளங்களாகவும், பெரும் நிலப்பரப்பு அவர்களின் நேரடியான கட்டுபட்பாட்டில் இல்லையென்பதுவும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவையாகும்.

இவையல்லாவற்றுக்குமப்பால் தமது ஆளுகைக்கு உட்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய தட்டிக் கழிக்க முடியாத பொறுப்பு புலிகளுக்கு உண்டு. ஆகவே தமது மக்களை சிறீலங்காப் படையினரின் தாக்குதலிருந்து பாதுகாப்பதன் ஒரு அங்கமான முன்னேற்பாட்டு தாக்குதலை பயங்கரவாத் தாக்குதலென்று மூளை சரியாக இயங்குபவர்கள் சொல்ல மாட்டார்கள்.

தமிழர்களுக்குள்ள தார்மீக பொறுப்பு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் அதன் அடைவிலக்கு நோக்கிய இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. இறுதி அத்தியாயம் வெற்றிகரமாகவும் விரைவானவும் நிறைவு செய்யப் பட வேண்டுமானால் அதில் ஒவ்வொரு தமிழனுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனூடாவே தமிழ் தேசியத்தை வலுப்படுத்த முடியும்.

ஆதலால் வடக்கு கிழக்கு தமிழர், மலையகத் தமிழர், இந்தியா வம்சாவளித் தமிழர், தமிழ் நாட்டு தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் எனக் கூறுபட்டுபோய் நிற்காமல் தமிழன் என்ற ஒரே அடையாளத்திற்காய் ஒன்றுபட்டு போராட்ட சக்கரம் வேகமாகச் சுழன்று இலக்கையடைவதற்கு தமது பங்களிப்பை இதயசுத்தியுடன் நல்க வேண்டும். போரட்ட பங்களிப்பென்பது தனித்து ஆயுதம் தூக்குவது மட்மல்ல. அது எங்களது தலைவிதியை நாமே அமைத்துக் கொள்வதற்கான பேனா தூக்குவதாக, பொருளாதார ரீதியானதாக (நிதியை நல்குவதாக), மனோரீதியான பலத்தை ஊட்டுவதாக, புலனாய்வு ரீதியாக, கலை இலக்கிய ரீதியாக, அரசியல் ரீதியாக என்று பல்வேறு தளங்களில் நின்று தமது பங்களிப்பை ஒவ்வொரு தமிழனும் வழங்க முன்வர வேண்டும்.

“இராணுவத்துக்கு பலத்த அடி கொடுதால் எங்கட பெடியாள் என்பதற்கும்காரணத்தோடு காத்திருந்தால் இவங்கள் என்ன செய்யிறாங்கள் என்பதற்கும்” தமிழர்களுடைய போராட்டம் ஒன்றும் கிரிக்கட் ஆட்டமல்ல என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.

எமக்கான விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும், அதற்கு மிகப் பொருத்தமான தலைமை எமக்குண்டு. அந்த தலைமையின் கீழ் ஒன்று திரண்டு எமது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காகவும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காகவும் நாம் மேலே குறிப்பிட்டது போல் உடனடியாகவே களத்திலிறங்க வேண்டும்.

பாதச்சுவடுகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப எமக்கான விடுதலை விரைவு பெறும்.

சிவஒளி

இல்லை…இல்லை…

Records from 2006 files

உணவுக்கு மரவள்ளிகூட இல்லை
உயிர்காக்க மருந்தில்லை
நத்தாருக்கு கேக் அடிக்க மாஜரினில்லை
பொங்கலுக்கு சக்கரையில்லை
பாறணைக்கு காய்கறியில்லை
பள்ளிசெல்லும் பையனுக்கு
குமுழ்முனை பேனையில்லை
குழந்தைக்கு பால்மாயில்லை
எக்ஸ்றே இயந்திரத்துக்குஎனேஜி இல்லை
எக்ஸ்போவில் ரிக்கறில்லை
ஏரியாகொமாண்டரிடம் கிளியரன்ஸ் இல்லை.

ஏ நைனுக்கு விழிப்பில்லை
மரக்கறிக்கு உரமில்லை
சந்தையில் மீனில்லை
விலைவாசிக்கு குறைவில்லை
தேரிழுக்க பக்தனில்லை
ஏர்பிடிக்க வலுவில்லை
மனித உரிமைக்கு மதிப்பில்லை
சிந்தும் குருதிக்கு பெறுமதியில்லை
விசாரணைகளுக்கு முடிவில்லை
மிகிந்தலைக்கு பாதையில்லை
மகிந்தரின் திமிருக்கு எல்லையில்லை.
சிறீலங்காவின் அழிவுக்கு நாள் தூரமில்லை.

இரத்தின “மை”

சுதந்திரமே சுவாசம்….

Records from 2006 files

கரையேற வழியின்றி தவிக்கின்ற
வாகரை மக்களின் கண்ணீர்
தென்னிலங்கை வானில் மழையாக…

நேற்றுவரை நாமிருந்த வீடு-அதில்
நிமிர்ந்து நடந்த சுவடுகள்,
கூடவே வாழ்ந்த உறவுகள்…
இன்று திசைக்கொன்றாய்பசித்த வயிற்றுடன்.

வனந்தரமே வாழ்கiகையாகி
மரக்கிளையே கூரையாகி
விழுதுகளே ஏணைகளாகி
வேர்களே தாய்மடியாகி
மழைநீரே தாய்முலையாகி
தாண்டவம் ஆடுதுதமிழன் அவலம்.
மீண்டும் துளிர்க்கும்வசந்த்ததை எதிர்பார்த்து.

எறிகணையானலும் எதிர்த்து நிற்போம்.
சாவையும் சந்திக்க தயாராகுவோம் - ஆனால்
சரணகதியடையோம் சபதம் கொள்வோம்.

நெருப்பாற்றையே கடக்க துணிந்த எங்களுக்கு
மாவிலாறொன்றும் மரணப்பொறியல்ல மனங்கொள்வோம்.

முகமாலையில் மூக்குடைபட்ட
துட்டகைமுனுவின் புத்திரர்களே!
மீண்டும் ஏன்தலையை
மலையில் மோதமுயற்சிக்கிறீர்கள்?

சுட்டெரிக்கம் சூரியனின்சாட்சியாக சொல்கிறோம்
எம்மை தொட்டவர் கரம்வெட்டியெறிவோம்.
முட்டிய பகையுடன் மோதிக்கதைமுடிப்போம்.

“சுதந்திரமே சுவாசம் எனக்கொள்வோம்
விடுதலையை விரைவாய் அடைவோம்.”

இரத்தின “மை”

அலரிமாளிகை கோயபல்சுக்கு ஒரு அவசரக் கடிதம்.

Records from 2-2-2007 file.

அன்புள்ள கேகலிய வ(ர)ம்புக்கெலவிற்கு வணக்கம்.
உங்கள் நலத்திற்கு கண்டி மகாநாயக்க தேரர்கள் அருள்புரிவார்களாக.வழக்கம் போலவே வற்றாப்பளை அம்மன் குறைவைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்கின்றோம். எங்கள் வாழ்க்கை நம்பிக்கையுடன் நகர்கிறது. ஏங்கள் நம்பிக்கைகள் என்றைக்கும் வீண் போனதும் கிடையாது.

அண்ணை எங்களுக்கோ ஏகப்பட்ட ஏற்பாடுகள் அதற்கு மத்தியிலும் இந்த மடலை உங்களுக்கு அவசரப்பட்டு ஏன் எழுதுறன் தெரியுமோ?காலிதுறைமுகம் மீது நடத்தப்ட்ட தாக்குதலைத் தொடாந்து பிபிசி வழங்கிய செய்தி அறிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்.காலி ஒரு சுற்றுலா நகரமே அல்ல எனவும் பிபிசி தவறான தகவலை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். மானத்தமிழருக்கு நீங்கள் அண்டப் புழுகன் என்பது தெரியும். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிச்சை போடுகிற நாடுகளுக்கெல்லோ சொல்லிப்போட்டியள்.

அவையென்னன்டா காலி நகரிலேயே வந்து நின்று காலியின் சுற்றுலா சிறப்பையல்லோ சொல்லியிருக்கினம்.

உலகவங்கியின் தென்னாசிய பிராந்தியத்துக்கான உப தலைவரான பிறபுல் பற்றல் ஐயா எங்கட பீற்ற கெறல்ட் ஐயாவையே விஞ்சிப்போட்டார். பிறபுல் பற்றல் ஐயா உரையாற்றும் போது “ஆயுபோவன்” என மட்டும் கூறியதிலிருந்து சிறீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறிப்போட்டார்;. அப்படி என்றால் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் இருக்கென்றுதானே அர்த்தப்படுத்துகிறார். அதுமட்டுமில்லை ஒல்லாந்தரால் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க காலி துறைமுகம் என்றும் சுற்றுலா துறையினரை கவரும் முகமாக உலகளாவிய ரீதியில் பெயர்பெற்ற கட்டிட கலைஞரான ஜொப்றி பாபாவால் காலி கோட்டையின் நுழைவாயில் வடிவமைக்கப்பட்டதென்றும் கூறியுள்ளார். சரி அவற்றை உரையை விடுவம் நீங்களே காலி சுற்றுலா தளம் என்பதை நிரூபித்துப் போட்டீர்களே. இந்த நிமிடம் வரை 107 அமைச்சர்களை கொண்ட சிறீலங்கா அரசாங்கம் இலங்கை அபிவிருதித்தி சபை என்ற பெயரில் பிச்சை எடுப்பதற்காக நடத்திய நிகழ்வை காலியில் அதுவும் ஐந்து நட்சத்திர விடுதியில் (லைற் கவுஸ் கொட்டலில்) நடத்தியிருக்கிறீர்களே. இது ஒரு மிக நுண்ணிய உதாரணம் மட்டுமே உங்களுடைய அண்டப்புளுகுக்கு.

வெள்ளை மாளிகைக்கோ அல்லது அகாசி ஐயாவுக்கோ எழுதியது போல் நீண்ட கடிதத்தை உங்களுக்கு எழுத நான் விரும்பவில்லை. தானத்தில் வாழ்கின்ற தலாதா மாளிகைக்கே நாங்கள் புஸ்வானமாக தெரிந்தால் வற்றாப்பளைக்கு தனது மிடுக்கை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. கெடுபிடி சொல் கேளாது என்பது போல் உங்களுக்கு “இடிதான்” சரி. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. துட்டகைமுனுக்களாக காட்டிக்கொள்ள விரும்பும் உங்களில் பலர் ஏன் சுத்த முட்டாள்களாவே இருக்கிறாhர்கள்? அடிக்கடி எங்கள் புத்திரர்களில் எத்தனை சதவீதம் உள்ளனர் என்றும் எவ்வளவு நிலப்பரப்பு எங்கள் புத்திரர்களிடம் உள்ளது என்றும் கூறும் நீங்கள் ஏன் கடந்த கால வரலாற்றுப் பாடங்களை கற்றுக்கொள்ளாதது போல் காட்டிக்கொள்கிறீர்கள்?

மணலாற்று காட்டுக்குள் நுழைந்த மாற்றான் படை 24மணித்தியாலத்துக்குள் எங்கள் தலைவரை பிடித்துவிடுவோம் என மார்தட்டியது. கடைசியில் கதறிக் கதறி ஓடினார்கள். லெப் கேணல் ஜொனியை பொறியாக வைத்தவர்களுக்கு ஜொனியின் பெயராலேயே புதைகுழி அமைத்தோம்.

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்ததோடு புலிகள் 90சதவீதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஓலமிட்டார் ரத்வத்தை இறுதியில் ஒப்பாரியெல்லோ வைத்துக்கொண்டு திரிந்தவர். யாழ்ப்பாண வீழ்ச்சிக்குப் பிறகு எமது போராளிகளின் கதை முடிந்ததாக உங்கள் இராணுவ வல்லுனர்கள் கற்பனை பண்ணிய பிற்பாடுதானே ஈழப்போரிலே புதிய உத்வேகமும் எழுச்சியும் பிறந்தது. இரண்டு வருடங்கள் அலைக்கழிந்து தெற்குப்பதியில் மாங்குளம் வரையும் வடக்கில் கிளிநொச்சி வரையும் வந்தபிற்பாடு என்ன நடந்தது? 3நாட்களுக்குள் துட்டகைமுனுக்களின் கொட்டம் அடக்கினோம்.

கொக்காவிலில் இறுதிச் சடங்கு நடத்திய பின்பு சுமார் 240வருடங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாகவும் கௌரவப் போருக்கும் வழிவகுத்த ஆனையிறவுக்கான ஈமச்சடங்கை கட்டுநாயக்காவில் நடத்தியது தமிழர்படை. குறைவைக்க கூடாது என்பதற்காக தீச்சுவாலைக்கும் இலட்சார்ச்ச அர்ச்சனை நடத்தினார்கள் புலிகள்.

வெள்ளைக்காரன் வீடு தேடிவந்ததற்காகவும் எமக்கு சமாதானத்தின் மீதும் அமைதியின் மீதும் இருந்த அக்கறையை வெளிப்படுத்துவதற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நயவஞ்சகர் ரணிலோடு இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.

பலஸ்தீனத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுக்களுக்கு உண்டான நிலைதொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தேசியத் தலைவர் என்ன பதில் சொன்னர் என்பது தெரியும்தானே. வன்முறையை நாமாக என்றைக்குமே தெரிந்தெடுபதில்லை என்பதற்கு அதுவும் நல்ல உதாரணம். ஆனால் எங்களுக்கு பேச்சுக்களுக்கு போக முன்னரேயே சமாதானப்பேச்சுவார்த்தைகள் விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்று தெரிந்திருந்தும் இராணுவ வலுச்சமநிலையை தமிழர்களுக்கு சார்பாக மாற்றியமைத்த பின்னரும் புதிய உலக ஒழுங்கிற்கு அமைவாக எமது உபாயங்களை மாற்றியமைத்தோம்.

நீங்கள் என்னவென்றால் புலி புஸ்வானம் என்றும் அவார்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாகவும் முல்லைத்தீவுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று முழங்கி கொட்டுகிறீர்கள்.

திருமலை மீது எங்களின் ஒரு எறிகணை விழும் என்றாலே அது உங்களுக்கு பெரும் தலையிடியை கொடுக்கும், ஆனால் எமது தேசத்தின் விடுதலைக்காக தமிழர்படை செய்யவிருப்பதோ என்றைக்கும் மீள முடியாத அதிர்ச்சி.அதற்கு அமெரிக்கா பாகிஸ்தான் என்ன யார் வந்தாலுமே ஒக்சியன் தரமுடியாது.

புதிய இராணுவ உத்திகளால் புலிகள் நிலைகுலைந்து போயிப்பதாக கூறுகிறீர்கள். மக்களை பட்டினி போட்டு அவர்கள் மீது எறிகணைகளை ஏவி கொன்றொழிப்பது புதிய இராணவ உத்தியா?

சம்ப+ரை கைப்பற்றியமைக்காக வனிலா கேக் வெட்டி வாகரைக்கு சொக்லேட் கேக் வெட்டிய உங்களுக்கு சீனியும் கொழுப்பும் கூடிப்போய்விட்டது. தமிழீழத்துக்கு அண்மையில் உள்ள ஒரு நாட்டுகாரருக்கு உந்நநிலை வரக்கூடாது பாருங்கோ. நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்காததை எங்களால் செய்து முடிக்க இயலும். இதை செய்தும் காட்டியிருக்கிறம். இது அமெரிக்கருக்கும் தெரியும் ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கும் தெரியும். ஆதலால்தான் அவர்களுக்கு எங்கள் மீது ஏகப்பட்ட “அக்கறை”.
இதோ உங்களுக்கு விரைவில் வேப்பம் ப+ வடகத்தில் கேக் செய்து அனுப்பப் போகிறோம். எலும்பு துண்டை நக்கி திரிகிறவர்களுக்குமாக சேர்த்து. புரிகிறதா? என்ன செய்ய உங்களுக்கு புலியினுடைய வழியும் தெரியவில்லை அவர்களிகளின் மொழியும் புரியவில்லை.

சுமார் மூன்று தசாப்த காலப்பகுதியில் ஐந்து ஐனாதிபதிகள் ஆறிற்கு மேற்பட்ட பாதுகாப்பு அமைச்சர்கள் முப்பதிற்கும் மேற்பட்ட படைத்தளபதிகள் இவர்கள் அனைவரிற்கும் எதிராக ஒரேயொரு தலைவன் பிரபாகரன்தான் அவதாரமெடுத்துள்ளான்.இதையாவது ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நன்று.
மீதியை புதுவருட கிரிபத்தோடு சேர்த்து அனுப்புகிறேன். பிரித் நூலவது காப்பாற்றுகின்றதா எனப் பார்ப்போம்.

நன்றி.

அன்புடன்
சிவஒளி.

Monday, October 23, 2006

காலம் கனிகிறது…- இரத்தின’மை’

உயிர் நிழலாக உதிரம் மையாகா
பயிர் வளர்த்தோம்.
விதியென்றும் வினையென்றும் விம்மாமல்
ஏமக்கென்றொரு வாழ்வமைக்க விரைந்தோம்.
நெருப்பாறும் நெடும்காடும் இடைவந்த போதும்
விடுதலையில் விருப்பு கொண்டதால்
நிமிர்வோடு நடந்தோம்.

பயணத்தின் பாதிவழியில்
நியாயத்தின் போதிமரம் என
சொன்னோரை சந்தித்தோம்.
அவர்கள்,
பலவர்ணசாயம் பூசிய
தித்திப்பான முட்டாய்களை காட்டி
எமது மீதிப்பயணத்தை முடக்க நினைத்தார்கள்.

மானுடதர்மத்திற்காய்
உடல்களில் வெடிகுண்டு சுமக்க தயங்காதவர்
அடக்கத்தோடு சொன்னோம்,
சிலுவைகளை சுமக்கிறோம் என்பதன் அர்த்தம்
சித்திரவதைகளை விரும்புகிறோம் என்பதல்ல.
உரியவர்கள் புரியமறுத்தார்கள்.

ஒரே அளவுகோலிலேயே
அடக்குமுறையையும் சுதந்திரத்தையும்
கணித்தார்கள்.
பணியமறுத்தமையினை வர்ணித்தவர்கள்
கிரகிக்க மறந்தார்கள்.

காலத்தின் சலிப்பும்
கரிகாலனின் பொறுமையும்
எல்லையை தொடும் தருணத்தில்.
எதிர்வினைகள் எதுவாயினும்
பொறுப்புக்கூறவேண்டியோர் நாமல்ல.
மீன்பெட்டிகளும் நெல்லுமூட்டைகளும்
குண்டு சுமக்க விரும்பியதில்லை.
இனவேரறுப்பு தெளிவாய் தெரிந்தபின்
ஆண்டபரம்பரை அலட்சியம் செய்யுமா?

சுனாமி கட்டமைப்பு செத்தபின்பும்
இனவாத கூட்டமைப்பு வந்தபின்பும்
சாமிசரணம் சொல்லிஆமியே போய்விடென்று
அமைதியாய் விடைகொடுத்தோம்.
அவனும் அசைவதாயில்லை.
சமாதானத்திற்கான சைகையுமில்லை.
தும்மல் தொடக்கம் இழுப்புவரை,
சலரோகம் உட்பட சகலவியாதியும்
இப்போ சமாதானத்திற்கு.
வாடிப்போன வெண்புறாவிற்கு வேண்டுவது
வெறும்கூசா நீரல்ல
விற்றமின் நிறைந்த குளுக்கோசு.
இல்லையேல் ஓடிப்போகும் ஒளிந்து போகும்.
ஏன் அழிந்தே போகலாம்.
ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாலும்
அடக்கம் செய்ய யாரும் வரார்.

வெல்லப்போகும் கூட்டம்
இலங்கை செல்லப்போகும் திசையை
இடித்துரைத்தாலும்
சிங்களம் சிந்திப்பதாயில்யை.
கனவோடு வாழ்ந்ததனால்
அகிலம் தன்னோடு அணிதிரளும் என்ற எண்ணம்.
இது வீழ்தலின் அறிகுறி.
முடியப்போகும் அதர்ம அடையாளம்.

கோட்பாடு தாண்டிய கோதாரி காதல்
சாதல் என்றாயிற்று.
மீண்டும் மீண்டும் சம்பிரதாயமற்ற
சம்பந்த கலப்பு.
உரித்தை மறுத்து சீதனம்.
அதிலும் இழுபறி.
கோடி வேண்டாம்,
ஓடிஆடி பாட்டன் பரம்பரைபாடி
வாழ்ந்த பூமி மட்டும் போதும் என்ற போதும்
விடுவதாயில்லை.

கட்டாய கலியாணம் கடைசியில்
விவாகரத்து.
விதியின் தீர்ப்பு இது.
சிங்களத்திற்கு சினப்பு
இதுவே எங்களுக்கு சிறப்பு.
சிறீலங்காமாதாவின் ஏமாற்றம்
தமிழ்த்தாயின் ஏற்றம்.

நிமிர்தலின் குரல் கேட்கிறது
மணிஓசை ஒலிக்கிறது
தீபங்கள் ஒளிர்கிறது.
சுகப்பிரசவம் உறுதியாயிற்று.
மண்ணில் மெல்ல சரிந்தவர்
விண்ணில் ஒளியாய் தெரிபவர்
தவழ்ந்து விளையாடி மடிமீது தூங்குபவர்
தாய்முலையில் தாகம் தீர்க்கும்
காலம் கனிகிறது.

வெள்ளை மாளிகையின் கள்ளர் கூட்டத்திற்கு,

வணக்கம்

ஒரு நாட்டினுடைய இறைமையை பாதுகாக்கவும் வன்முறைகளை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம். அந்த முயற்சிகள் இதயசுத்தியுடனானதாக இருக்கவேண்டுமென்பதோடு சந்தேகங்களை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது. அத்துடன் அது நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்பதே நீதியை எதிர்பார்க்கும் எல்லோருடையதுமான கருத்து.

ஆனால, உங்களுடைய கருத்துக்களும் செயற்பாடுகளும் அநீதிக்குக்கு ஆதரவாகவும் மனச்சாட்சிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. உலக விவகாரங்களையும் அதில் உங்களுடைய வகிபாகத்தையும் தொடர்சியாக அவதானித்துக்கொண்டு வருபவர்கள் உங்களிடம் இருந்து நீதியை எள்ளளவு கூட எதிர்பார்க்க முடியாது என்பதை உறுதிபட உணரமுடிகிறது.

இலங்கைத் தீவினுடைய சமாதான முயற்சிகளுக்கு பக்கதுணையாக இருப்பீர்கள் என இருந்த மிச்ச சொச்ச நம்பிக்கைகளும் அடியோடு அற்றுப்போய்விட்டது. அதற்கான காரணத்தை மிக அண்மையில் நீங்கள் கூறிய கருத்துக்களிருந்தே அலச ஆரம்பிப்போம்.

கடற்படையினர் மீது கபரணவில் நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து போயுள்ள அரச தரப்பை ஆசுவாசப்படுத்தும் முகமாக வெளியிட்டது போலுள்ளது அந்த அறிக்கை.

1) 90 பொதுமக்களும் மற்றும் கடற்படையினரும் கொல்லப்பட்டதாக கூறியுள்ளீர்கள்.

2) தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளையும் வன்முறைகளையும் கைவிட்டு சமாதான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டவேண்டும் என்ற சாரப்பட தெரிவித்துள்ளீர்கள்.

United States Condemns Suicide Bombing in Sri Lanka
Media Release17 October 2006

Statement by Sean McCormack, Spokesman, U.S. Department of StateThe United States condemns yesterday’s suicide attack near Habarana, Sri Lanka that killed more than 90 civilians and members of the Sri Lankan Navy. We extend our deepest sympathies to the families of the victims.

Though there have been no claims of responsibility, this attack is in keeping with the tactics of the Liberation Tigers of Tamil Eelam, a group long designated as a Foreign Terrorist Organization by the Department of State. As we and others in the international community have made clear, the LTTE must renounce the use of terror. Only through the cessation of violence, a renewed commitment to peace talks, and constructive engagement by both sides can a political solution to this conflict be achieved.

சிறீலங்காவினுடைய படைத்துறை சார்ந்தோரே தமது தரப்பில் கொல்லப்ப்டோர் கடற்படையினர் என வெளிப்படையாக கூறியுள்ள போது நீங்கள் ஏன் பொல்லை கொடுத்து அடி வாங்க முற்படுகிறீர்கள்? தேவையாயின் http://www.defence.lk/ என்னும் இணையத்தளத்தை பார்வையிடவும். அவ்வாறான தேவை எற்படாதென நம்புகிறேன். ஏனெனனில் உங்களுத்தான் உண்மைகள் அனைத்துமே தெரியுமே. நீங்கள் நித்திரை கொள்பவர் போல் நடிப்பவரே தவிர உண்மையில் நித்தரையில்லை என்பது புரிகிறது. தெரிந்தும் எங்களுக்க சொல்ல வேண்டிய அவசியம்முள்ளதால் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

சரி உயிரை தற்காப்பதற்கான நடவடிக்கைகள் பயங்கரவாதம் என்றால் உயிரை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு உங்கள் அகராதியில் என்ன வரைவிரக்கணம். செஞ்சோலையில் பிஞ்சுகளை அரச பயங்கரவாதம் குதறிய போது எங்கே இலங்கைத் தீவு மீதான உங்கள் பார்வை? சிறுவர்களை படைக்கு சேர்ப்பதாக ஒப்பாரி வைக்கும்நீங்கள் அப்போது ஏன் சிலைபோல் பேசாது இருந்தீர்கள்?

உங்கள் கண்களில் பள்ளி மாணவிகள் பயங்கரவாதிகள் ஆயுதம் தரித்த அரச பயங்கரவாதிகள் அப்பாவிகள். நீங்கள் என்ன தாய்ப்பால் குடித்து வளர்ந்த மனிதர்களா அல்லது தானியங்கி றோபோக்களா? றோபோக்கள் கூட மனச்சாட்சிப்படி இயங்கக் கூடும், ஆனால் நீங்கள்….சீ….

ஆயுதம் தரிக்காத படையினர் மீதான தாக்குதல் என குறிப்பிட்டிருந்தீர்கள். கீழுள்ள படத்தைப் பாருங்கள் உண்மை உறைக்கும். ஆக அந்த ஆயுதங்கள் ஒரு பேரூந்தில் பயணித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதையும் கவனத்திற்கொள்க.

சரி உங்கள் திருப்திக்காக ஆயுதம் தரிக்காத படையினர் என குறிப்பிட்டாலும் சிறீலங்காவின் இராணுவ விவகாரப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவின் கூற்றுப்படி ஆயுதம் தரிக்காத படையினரை கொல்வதில் தவறில்லை. ஏனெனில்,மாணவர்களாக இருந்தாலும் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தால் அவர்களும் பயங்கரவாதிகளே. அவ்வறானவர்களை கொல்வதில் எந்த தவறும் இல்லையென குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறியின் எங்கள் கடலில் எங்கள் கடற்றொழிலார்களையும் உயிரை கையில் பிடித்தபடி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக இந்தியா செல்லும் அப்பாவிகளையும் பேசாலை அல்லைப்பிட்டி என எங்கும் அப்பாவி மக்களை கொல்லும் ஆயுதம் தரித்த கடற்படையை கொல்வதில் தவறொன்றும் இல்லை. உபதேசம் செய்வதற்கு உங்களுக்கென்றொரு தகுதி வேண்டு;ம் உங்களுக்கு அந்த தகுதி ஆபிரிக்கம் லிங்கன் மறுபிறப்பெடுத்தால் கூட கிடைக்காது.

கியூபாவின் ஜனநாயக குரல்வளையை நெரிக்க முனைந்து, ஆப்கானிலும் ஈராக்கிலும் இரத்த ஆறை ஓடவைத்து ஈரானையும் தென் கொரியாவையும் மிரட்டிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ஜனநாயகத்தை பற்றி கதைக்க? சிறீலங்கா என்ன சின்ன இஸ்ரேலா உங்களுக்கு? நாட்டின் இறைமை பற்றி பேசும் நீங்கள் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தும் போதும் என்ன செய்தீர்கள்? பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு பாலூட்டும் நீங்கள் தாய்வானை பார்த்து ஏன் முறைத்தீர்கள்? உங்கள் சொல் கேட்டால் நல்லவர்கள் இல்லையேல் பயங்கரவாதிகள்.

நாங்கள் ஒன்றும் எண்ணைக்காக அப்பாவி மக்களின் இரத்த ஆறை ஓடவைக்கும் கூட்டம் அல்ல. எங்கள் கௌரவமான வாழ்வுக்காக நீங்கள் ஒரு மேற்கெண்டதைப் போன்று சுதந்திர போராட்டமே நடத்துகிறோம். ரீச்சாட் பவுச்சர் கூறியது போல எங்களுக்கும் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கான உரிமையுண்டு. அந்த உரிமையை வென்றெடுப்தற்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க தயாராக உள்ளோம். சாவால்கள் ஒன்றும் எமக்கு புதியவை அல்ல. போராடினார்கள் வென்றார்கள் என்று இருக்குமே தவிர மண்டியிட்டார்கள் என்று என்றைக்குமே இருக்காது. எமது போராட்ட வடிவமும எதிரியை எதிர்த்து நிற்பதற்கான திடமும் பலஸதீனத்தைப் போலவோ மொன்றி நிக்கவோ போல் இருக்கப்போவதில்லை. ஓரு நவீன வியட்னாத்தைப் பார்த்தது போலவே எமது எதிர்த்து நிற்கும் பலம் சுதந்திரம் அடையும் வரையும் இருக்கும். CIA,FBI,RAW,ISI,MI5 போன்றவற்றைக் கேட்டால் வளைந்து கொடுக்காத எமது வரலாற்றுப் பயணத்தை சொல்லும்.

விடுதலைப் புலிகள் மீண்டும் போரில் ஈடுபட்டால் வலிமை பொருந்திய இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என முன்னர் ஒரு தடைவ குறிப்பிட்டிருந்தீர்கள். இஞ்சாருங்கோ அண்ணாச்சிமாரே வடிவா கவனியுங்கோ, எங்களை மிரட்டிப் பணியவைக்கலாம் என்பதை கனவிலும் நினைக்காதேங்கோ. உப்பிடி பலதடவை சிலபேர் மிரட்டிப் பார்த்தவை. உறுதிப்படுத்த உதாரணம் தேவையென்றால் தலைவரின் வரலாறு தொடர்பான “தலைநிமிர்வு” வரலாற்றுப் பொக்கிசத்தைப் பாருங்கள். குனியாத வீரம் எங்கள் குலத்தின் அடையாளம் என்பது புரியும். நாங்கள் பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறோமே தவிர பாரிய படுதோல்விகளை சந்தித்ததில்லை. பத்துப் பேராக இருந்த காலம் தொடங்கி 10 ஆயிரத்தை தாண்டியப பின்னும் அப்படித்தான். போராட்ட வடிவங்கள் மாறியதே தவிர போராட்ட இலட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை. சங்கர்,செல்க்கிளி அம்மான்,சாள்ஸ் அன்ரனி தொடங்கி அக்பர் வரைக்கும் இழப்புகளை சந்தித்துள்ளோம். அதனால் நாம் சேர்ந்து போகவில்லை. வீழ்ந்தவர்கள் செத்துப் போனதாக நாம் உணரவில்லை அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வித்தாகிப் போயுள்ளார்கள். எங்கள் இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கப்படவேண்டிய அந்த மகத்தான மாவீரர்களின் தியாகம் எமது போராட்டத்தின் அத்திவாரமாகியுள்ளது.

உங்கள் ஜனாதிபதி புஸ் பதவிக்கு வரும் போது எதிர்காலத்தில் சவாலாக விளங்கக் கூடிய ஒரு நாட்டின் பூகோள அமைப்போ பிரதமரின் பெயரோ தெரியாமல்தான் பதவிக்கு வந்தவர். ஆனால் நாங்கள் யாரென்பது உங்களுக்கு தெரியும்தானே???

அப்படிப்பட்ட நீங்கள் எங்களை மிரட்டுவதா? நீங்கள் என்னத்தை கதைத்தாலும் எதைக்கொடுத்தாலும் பெரும்பாலும் சிங்களப்படைகள்தான் களத்தில் எம்மோடு மோதும். அவர்களின் சுவாசத்தை நிர்ணயிப்பவர்கள் நாங்களே என்பது அவர்களுக்கே புரியும் தேவையென்றால் சில உதாரணங்களை சொல்கிறேன்.

• 1995 ஜீலை 28 ல் மணலாற்றில் எங்களுக்கு எமது 180 மாவீரர்களின் வித்துடல்களை அனுப்பியதற்கு பதிலாக ஒரு வருடம் ஆக முதலே 1996 ஜீன் 18ல் 1800 படையினருக்கு சமாதி கட்டினோம்.

• உங்கள் கிறீன்பரட் பயிற்சி எடுத்த சிறீலங்காவின் சிறப்பு படையினர் சுமார் 200 பேரை முதல் தாக்குதலிலேயே அடுத்த பிறப்பெடுக்க அனுப்பி வைத்தோம்.

• கட்டுநாயக்காவில் வித்தைகாட்டி போரியல் வல்லுனர்களையே திகைப்பில் ஆழ்த்தினோம.

• குடாரப்பு தரையிறக்கம் மூலம் உங்கள் தலைமுடிகளை உதிர வைத்தோம்.

• நீங்கள் நினைத்தாலே கைப்பற்ற கடினமெனக் கூறிய ஆனையிறவை நீங்கள் கருத்து தெரிவித்த இருவாரங்களுக்குள் கைப்பற்றி புதுவை அண்ணை கூறியது போல் 240 வருடகால முதுகு கூனலை நிமிர்த்தினோம்.

• தீச்சுவாலை மூலம் எமது மரபுப் போரின் தனித்துவத்தை அடித்துச் சொன்னோம்.

இவை சில உதாரணங்ளே இனிவரும் காலம் அடிக்கடி இடித்து சொல்லும். வல்வெட்டிதுறை தொடங்கி அம்பாந்தோட்டை வரைக்கும் எதிரியின் அவலக்குரல் கேட்கும்.

தலைவர் கூறியது போல் அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடுக்க வேண்டிய சூழல் நெருங்கி வருகிறது.

இத்தகைய சூழலிலும் மிக அழுத்தமாக ஒரு விடயத்தை கூறவிரும்புகிறோம். நாம் அமைதியை மிக மிக ஆழமாக நேசிக்கிறோம். அத்தகைய அமைதி வரும் நாளை ஆவலோடு எதிர்பார்ர்த்திருக்கிறோம்.

நீதியான சமாதானத்துக்காக இனியாவது உங்களால் இயன்றதை செய்து கடந்த கால பாவங்களுக்கு பிராயசித்தம் தேடுங்கோ. ஆ..மறந்தே போனன் கதையோடு கதையாக சீன் மக்கோமக்குக்கும் இவற்றை சொல்லி விடுங்கோ.

பிரபாகரன் கணக்கு என்றும் பிழைக்காது அவர் படைகள் என்றும் குனியாது.
மலரப்போகும் தமிழீழம் நிமிர்ந்து நின்று உங்களையும் கைநீட்டி வரவேற்கும்.
நன்றி.
அன்புடன்,
சிவஒளி.

Wednesday, October 18, 2006

ஒரு தமிழனின் குரல்! ஐயா அகாசிக்கு ஒரு யாழ் வாசியின் மடல்.

அன்புள்ள அகாசி ஐயாவுக்கு!

வணக்கம்.

நீண்ட அமைதிக்கு பின்னர் உங்கள் குரல் கேட்க முடிந்தமை மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைத் தீவினுடைய இன மோதுகைக்குகு அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டுமென்பதில் முனைப்போடு செயற்படுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நான் சொல்ல முனைகின்ற விடயத்தை, மிக விரைவாகவும், சுருக்கமாகவும் அனேகமாக இறுதித்தடவையாகவும் கூறமுற்படுகின்றேன். ஏனெனில், எங்கள் சூழல் அத்தகையது. அத்தகைய சூழலுக்குள் எங்களை தள்ளியவர்களிற்கான பொறுப்பு உங்களுக்கும் உண்டு.

நாங்கள் பொறுமையாக 4 ¾ வருடங்கள் கூறியது போதும் போதும் என்றாகி விட்டது. உங்களுடைய பொறுப்புணர்வையும் எங்களிற்கு புரிய முடிகிறது. எங்கள் கொல்லைப் புறத்திற்கு வர அச்சமுற்ற எதிரி இன்று எம் முற்றத்திற்கு வந்து நெஞ்சில் ஏற துணிகிறான். எங்கள் மண்ணில் வாழ வேண்டுவேண்டுமானலும் சரி அல்லது மாழ வேண்டுமானாலும் சரி எங்களிற்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அத்தகைய பொறுப்பை எந்தக் காரணத்தினாலும் தட்டிக்கழிக்க முடியாது. எமது வாழ்வை நாமே நிர்ணயிப்பவர்களாக இருந்தால் மட்டுமே முழு மனிதனாக நாம் வாழ முடியும் என்பதை போர்நிறுத்த காலப்பகுதி மீண்டும் மீண்டும் குட்டிச் சொல்கிறது.

அதற்கான ஆயுதங்களை செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது. படுகொலைகள் தொடர்கிற, குண்டுகள் எம் மண்ணில் பொழிகிற, பொருளாதார தடைகள் ஏற்பட்டுள்ள குறிப்பாக அரசியல் ரீதியான எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையுமே தவிடுபொடியாக்கப்பட்டுள்ள நெருக்கடி மிகுந்த சூழலுக்குள் இருந்து கொண்டு இந்த மடலை எழுதுவதற்கு என்னை தூண்டியது, ஜீலை மாத இறுதிப்பகுதியில் நீங்கள் கூறிய கருத்துக்களே.

எந்தவொரு இராசதந்திரமும் உண்மைக்கு முன்னால் என்றோ ஒருநாள் மண்டியிட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் வகுத்த நுட்பங்களின் விளைவு உலைக்கள வியாசன் எழுதியது போல் “பாவப்பட்ட சமாதானமென்ற சொல் மீதே கோபம் வருகிறது எமக்கிப்போ”

உங்களிற்கும் எங்களிற்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. இருதரப்புமே சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் போன்ற வல்லமையுடையவர்கள். இது வரலாறு கண்ட யதார்த்தம். அந்த வரலாறுதான் எமக்கு வழிகாட்டியாகவும் நிற்கிறது. அப்படியிருக்க, எப்படி பொதுவான சில விடயங்களில் தனித்தனி நீதி இருக்க முடியும்.

1983 ஐPலை கலவரம் போன்ற கடந்த கால வன்முறை தாக்கங்களின் வரலாறுகளிலிருந்து தமிழர்கள் மீள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆர்மிரேஐ;சோ, அல்பிரட் அம்மையாரோ இதைக் கூறியிருந்தால் சகித்திருக்கலாம் ஆனால்…………………..

60 ஆண்டுகள் கடந்தும் ஹீரோசிமா, நாகசாகி தாக்கத்தை நினைவுகூர்ந்து அனுஷ்டித்து, அதனை ஒரு படிப்பிணையாக கொண்டு வளர்ச்சியடைந்த நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிற்கு எதிராக நடந்தது போர். அது நீங்கள் விதைத்த விதையின் அறுவடை. எங்களிற்கு எதிராக நடப்பது இன ஒழிப்பு. எங்களிற்கும் தாங்களே அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் எங்கள் அங்கீகாரம் இல்லாத அரசாங்கத்தின் கோரமுகம். அதாவது அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது உங்களிற்கும் தெரிந்ததுதானே. அதனால்தானே கதிர்காமருக்கு உங்களோடு மனக்கசப்பு ஏற்பட்டது. கிறிஸ்பற்றன் வருகைதந்த போது தனக்கு நெருங்கியவர்களிடம் இதனை கதிர்காமர் விரக்தியோடு கூறியதாக அறிந்துள்ளேன்.

அப்படியிருந்த நீங்கள், ஏன் திடீரென இப்படி மாறினீர்கள்…. அடிக்கடி நீங்கள் வருவதாக பேச்சுக்கள் அடிபடும் பின்னர் அது தடைப்பட்டுப் போனதாக செய்திகள் வரும். தற்போது மீண்டும் நீங்கள் வருவதாக செய்தி பரவுகின்றது. இது உங்களுடைய இலங்கைத் தீவுக்கான பதின்மூன்றாவது விஜயம். அதிஸ்டம் இல்லாத 4 என்று சொல்லுவினம் அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நியாயத்தின் பக்கம் நீங்கள் நிற்பீர்களானால்; அதிஸ்டம் அற்றது கூட என்றோ ஒரு நாள் வெல்லும். நீங்கள் என்ன போக்கில் வருகிறீர்கள் என்பது உங்களுக்கும் நீங்கள் சார்ந்தோருக்குமே வெளிச்சம். ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக கூறுகிறேன், எங்களை மிரட்டி எதையும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்.அது கற்பனையாகவும் கனவாகவுமே காலம் முழுக்க இருக்கும். இந்த நிலையிலேயே கடந்த ஜீலை மாத இறுதியில் நீங்கள் கூறிய கருத்துக்கள் மீதான ஒரு பிரதிபலிப்பை இங்கே வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

உண்மையில் இந்த பிரதிபலிப்பு உடனடியாகவே எங்களிடமிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், எங்கள் வாழ்வியல் முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதனை பின்தள்ளி விட்டது. தாமதமானாலும் தரமான விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் எப்போதும் உண்டென்பதால் சில விடயங்களை சுருக்கமாக அழுத்தமாக உங்களுக்கு கூற விளைகிறேன்.

சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தறுவாயில் ஐப்பான் அரசு இருப்பதாகவும் அதனை தலைவர் பிரபாகரனுக்கு தெரியப்படுத்துவதாகவும் மற்றும் ஏனைய சில அரசுகள் எடுத்தமை போன்ற தெளிவாகப் புரியக்கூடிய சில நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரீசிலித்து வருகிறோம் என நீங்கள் கூறியிருந்தீர்கள்.

நீங்கள் எடுக்க இருக்கும் முடிவு தொடர்பாக தலைவர் பிரபாகரனுக்கு, தெரியப்படுத்த இருப்பது நல்ல விடயம் அதேவேளை, இன்னோர் விடயத்தையும் நீங்கள் மறக்கக்கூடாது. உங்களுக்கு எப்படி முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உள்ளதோ அதனை விட “மிக முக்கியமான சூழல்” எங்களுக்குள்ளது. முக்கியமான சூழல் ஊடாக முன்வைக்கப்படவுள்ள தீர்க்கமான முடிவு ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பிற்கான பதிலைப் தரப்போகிறது. ஏனைய சில அரசுகள் எடுத்த தவறான முடிவினாலேயே இந்த கணம் வரை விடுதலைப் புலிகளை என்ன செய்யலாம் என எண்ணி விழிபிதுங்கி நிற்கின்றன. இவர்கள் எடுத்த இந்த முடிவுதான் தமிழர் தரப்பை சமாதானப் பேச்சுக்களிலிருந்து தூரத் தள்ளியது. அன்று உங்களைப்போல் சிந்தித்தவர்களே இன்று இத்தகைய கருத்துக்களை கூறுகிறார்கள். இப்படியிருக்க அகாசி ஐயா நீங்களுமா இப்படி???

தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்பாக சில கருத்துக்களை தெளிவாக புரிந்து வைத்துள்ள நீங்களா, எங்களுக்கு புரியும் படியான சில நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டீர்கள்.

எமது தாயகப் பரப்பில் UAV அதாவது உளவு விமானம் தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கின்ற, கிபீர் விமானம் குண்டுகளை “கொட்டிக்” கொண்டிருக்கின்ற, பல்குழல் உட்பட்ட எறிகணைகள் எங்கள் தேசத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற, பிசாசுகள் போல் சிங்கள கடற்படை அலைந்து கொண்டிருக்கின்ற, நாசகார அரசாங்கங்கள் எங்களை அழிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்திருக்கின்ற இந்த வேளையிலும் நீங்கள் சொன்ன அந்த வரிகளை மிகத் திடமாக திரும்பவும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

எமது மக்களின் அவலத்தை தீர்ப்பதற்காக எமது உரிமையை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்துள்ள தமிழர் தலைவர் பிரபாகரன் அவர்கள், கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு மகாபுருசர், தமது இலட்சியப் பயணத்தையிட்டு மிகத்தெளிவான செயல்திட்டத்தை வைத்துள்ளார் என்பதை நீங்கள் விரைவில் மீண்டும் உணரப் போகிறீர்கள்.

பசிக்கு உணவின்றி எங்கள் பிஞ்சு மழலைகள், பெண்கள்,முதியோர் உட்பட்ட மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்ற, மாளிகையில் வாழ்ந்த வம்சம் மரநிழலில் வாழ்கிறது.இதன் அர்த்தம் எமக்கு எம் மண்ணில் வாழ்கின்ற சுதந்திரம் வேண்டும்.அத்தகைய சுதந்திரம் கிடைக்கும் என்றால் காலம் முழுக்க எங்கள் வாழ்வு மரநிழழில் கழிந்தாலும் கவலையில்லை. சுமார் 3 இலட்சம் உறவுகளின் நிலை இதுதான்.எமது 3 தசாப்த கால விடடுதலை போராட்ட வரலாற்றில் இதனையும் விட அதிகமான அவலங்களை அனுபவித்திருக்கிறோம்.ஆனால் அது போரென நேரடி பிரகடனத்தோடு மேற்கொள்ளப்பட்ட காலம். இதுவோ போர்நிறுத்த காலம் என்று கூறப்படுகின்ற பகுதி.

ஏன் நிலைமை இப்படியானது?

தமிழர் தரப்பானது எதிரியானவன் கனவில் காணமுடியாத இராணுவ சாதனைகளை படைத்து எமது இராணுவ மேலாண்மையை சர்வதேச சமூகத்துக்கு நிரூபித்து காட்டிய போதே அந்த சர்வதேச சமூகத்தில் ஒருவராக நீங்களும் வந்தீர்கள். இப்படி உங்களைப்போல் பலவகையினர் பல்வேறு கோணங்களில். சிலர் கெஞ்சினார்கள், சிலர் மிரட்டிப்பார்த்தார்கள், பலர் அஞ்சினார்கள். எங்களுக்கும் “இராசதந்திரம்மும்” சாணக்கியமும் தெரிந்திருந்ததால் எல்லாவற்றிற்கும் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கின்ற அண்ணன் நீங்கள் உள்ளிட்ட உலக சமூகத்திற்கு பல சந்தர்ப்பங்களை தந்தார்,தந்துகொண்டிருக்கிறார்.

அதன் அடையாளத்தை அதற்குள் பொதிந்திருந்த அர்த்தத்தை முதுபெரும் இராசதந்திரி என்று சொல்லப்படுகின்ற நீங்களும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் உங்களுக்கென்றிருந்த அவகாசத்தையும் அநியாயமாக்கிவிட்டீர்கள்.இவற்றையெல்லாம் நீங்கள் உணர்ந்து மனச்சாட்சிப்படி நடப்பதென்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது. ஆனால்,இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இதனால் உண்டான விளைவுகளும் இனி உண்டாகப்போகின்ற விளைவுகளும் உங்களுக்கும் விடுதலைப்போராட்டத்தின் தாற்பாரியங்களையும் அதன் அடிநாதத்தையும் விளங்கிக்கொள்ளாதவர்களுக்கும் ஒரு வரலாற்று பாடமாக இருக்கட்டும்.

போர்நிறுத்த அமுலாக்கம் என முழக்கமிட்ட உங்களால் ஒரு சமரையே நிறுத்த முடியாமல் போய்விட்டதே.உங்கள் போன்றவர்களிற்கல்லவா நாங்கள் சந்தர்ப்பத்தை தந்து போனோம்.எமக்குள்ள அமைதி மீதான ஆழமான நேசிப்பை வெளிப்படுத்த அடி மேல் அடியடித்த போதும் வலியை தாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் இருந்தோமே? எங்கள் பிஞ்சுகளை அரச பயங்கரவாதம் கதறக் கதறக் குதறிக் கொன்ற போதும் வெஞ்சினத்தை அடக்கி பொறுமை காத்தோமே? 4 ¾ வருடகாலமாக பொறு பொறு என்றீர்கள் ஆனால் இன்று வரை உருப்படியாய் என்ன செய்தீர்கள்? ஐயா அகாசி சிங்கள பேரினவாத்துக்குத்தான் புரிய வில்லையென்றால் உங்களுக்குமா?

சு.ப.தமிழ்ச்செல்வன் தொடக்கம் தமிழ் கூட்டமைப்பு வரைக்கும் பெருமெடுப்பிலான வலிந்து தாக்குதலை சிறீலங்கா படைகள் மேற்கொள்ளப்போவதாக எச்சரித்தும் உங்களுடைய பதிற்குறி என்னவாயிற்று? நீங்கள் திரணியற்றவர்களா? அல்லது நாங்கள் திரணியற்றவர்கள் என்று எண்ணிவிட்டீர்களா?

ஐயா,உங்களுக்கான சந்தர்பங்கள் முடிவுக்கு வருவதற்கு மகிந்தர் முகூர்த்தம் பார்த்திட்டார். அதாவது உங்களுடய ஆட்டமும் தற்போதைக்கு முடிவுக்க வந்தாயிற்று. ஆனால் மகிந்தருக்கும் அவரது கூட்டணிக்கும் இன்னும் புரியவில்லை அவர்களிற்கும் அதுதான் நிலைமை என்று. அவர்களுக்கு இதனை தமிழ் மக்களின் சார்பில் புரியவைக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.அப்போதுதான் அவர்களிற்கு வலிந்த தாக்குதலிற்கும் (Offensive attack),பதிற் தாக்குதலுக்கும் (Defensive attack) அர்த்தம் புரியும். அத்துடன் தமிழனின் உணர்வும்,எல்லை கடந்த பொறுமையுடன் காத்திருந்த புலிகளின் பாய்ச்சலின் வீச்சும் தெரியும்.

அதற்கான தேதி குறித்தாயிற்று நேரம்தான் மீதி. தமிழர் தலைவன் பிரபாகரனின் சுட்டும் விரல் அசைவிற்காய் காத்திருக்கின்றோம்.அவர் விரலசைவில் எங்கள் தாய்மண் இருள் விலகும். தமிழீழ தாயின் விழிகள் திறக்கும்.

“வேலும் உண்டு வெள்ளைக் கொடியும் உண்டு வேண்டியதை சிங்கள அரியணைக்கு நாம் கொடுப்போம்.”

நன்றி.

அன்புடன்,
சிவஒளி

Friday, July 14, 2006

விடுதலையின் படிக்கல்லில்...

கருவறையில் மங்கலென்று
கலங்குகிறது நெஞ்சு
கண்ணீர் சொரிந்து விம்முகிறது பிஞ்சு மழலை.
புரிந்து உணர்ந்துகாலம் கடந்தாயிற்று.
ஞானம் தான் இன்னும் பிறக்கவில்லை.

வியவருடப் பொழுதும் விடிந்தாயிற்று.
வெந்து நொந்தவர் வேலெடுத்தோம்வினையறுக்க.
வேள்வித் தீயின் அர்ப்பணிப்புகளுக்கு
சமர்ப்பணம் செய்யவேண்டியவனே
அமைதியாய் அமர்ந்திருப்பதன்
அர்த்தம் என்ன?

மரணம் வரும்வரையில் காத்திருத்தல்
மறவர் பரம்பரைக்கு அழகல்ல.
உன்னை அழிப்பதற்காய்
காலனவன் பார்த்திருக்கிறான்.
தமிழரை காப்பதற்காகவே
கரிகாலனவன் அவதாரமெடுத்திருக்கிறான்.

களம்நோக்கி விரைந்தாலே
மனம்நோகாமல் வாழலாம்.
இனக்கலவரத்தின் வேர்கள்மீண்டும் துளிர்க்கிறது.
எம் தலைநகரிலேயே
தாண்டவம் ஆடியாயிற்று.
நாளை உன் வீட்டிலும்
இது விழுது பரப்பும்.

பன்னெடுங்காலமாய்
பாதகர் புரிந்த
இன்னல்கள் எல்லாம் மறந்தாயோ?
விண்ணகம் சென்ற எம் வேந்தர்
கனவு துறந்தாயோ?
என்னடா? ஏனடா?
இன்னும் ஏன் தயக்கம்?
உலகம் எமக்காய் உருகும் என்பது வேசம்.
சமாதானப் பேச்சென்பது
எம்மை சாகடிப்பதற்கானவிசம்.
அது நீலமாக நீண்ட நேரமெடுக்கலாம்.
ஆனால் மரணம் நிச்சயம்.
வீரர்க்கு சாவு ஒருதடவையே.
விரைந்திடு
விடுதலையின் படிக்கல்லில்
நீயும் ஒருவனாய்.

இரத்தின "மை"

உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும்.

கடந்த வருடம் எழுதப்பட்ட இந்த விடயம் காலத்தின் தேவை கருதி மீண்டும் ஒரு முறை....

தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம், சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு சூழல் உருவாக்கம் பெற்றுள்ளது.
பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் சரியான வரைவிலக்கணத்தை வகுக்காத சர்வதேச சமூகம், சூழலுக்கு ஏற்ப எது தனக்கு சாதகமாக அமைகிறதோ அதற்க்கேற்றவாறு தனது நகர்வினை மேற்கொள்கிறது.
பல சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்கள் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டிருந்தனர்.
சர்வதேசத்தின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் சர்வதேச சமூகத்தின் சொல்லுக்கு இணங்கி போக மறுத்ததினால் பயங்கரவாதிகளாக வெளிப்படுத்தப்பட்டார்கள். இது தொடர்பாக உலக வரலாறு எமக்கு சிறப்பான சில உதாரணங்களை எடுத்துக் காட்டியுள்ளது.இன்று உலகின் முதன்மையாக மதிக்கப்படும் மனிதரான முன்னாள் தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் முன்னர் பயங்கரவாதியென முத்திரை குத்தப்பட்டமையும் இன்றைய உலகின் முதற்பயங்கரவாதி ஒசாமா பில்லேடன் முன்னர் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக வர்ணிக்கப்பட்டமையும் இதற்கு சிறந்த உதாராணங்கள் ஆகும். சர்வதேச சமூகம் என்பது கூட முழு உலகத்தையும் குறிக்கின்ற பொருளாக இருந்த போதும் இதன் செயற்பாட்டாளர்கள்களாக வல்லமை பொருந்திய குறிப்பாக அபிவிருத்தி அடைந்த நாடுகளே திகழ்ந்து வருகின்றன. இதில் சிந்திக்க வைக்கின்ற விடயம் யாதெனில், விடுதலை போராட்டம், புரட்சி மூலம் விடிவுபெற்ற நாடுகளே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க கங்கணம் கட்டி நிற்கின்றன.
மிக வலிமை பொருந்திய சர்வதேச சமூகம், மற்றுமொரு சவாலான சூழல், நசுக்க முனைகிறது என்ற வார்த்தைப் பதங்கள் ஆழமாக சிந்திக்க தூண்டும். சிலருக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். உண்மை என்னவெனில் எமது போராட்டத்திற்கான சதிவலையே சர்வதேச சமூகத்தினால் பின்னப்பட்டுள்ளது.
ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் தனித்து ஆயுதப் போர் மட்டும் என்றில்லை. அதையும் தாண்டி பல பரிமாண போர் வியூகங்கள் உண்டு. இவ்வகையான பரிமாணங்களை உலகுக்கு தமிழர்படை உணர்த்தியுள்ளது. அதேவேளை தமிழர்படையும் அந்த வகையான உலகின் போர்முறையை உணர்ந்து வருகிறது. இதற்கேற்றபோல் சில ஆரம்ப மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் உண்டு. அனுபவமே சிறந்த ஆசான். இந்த அனுபவம் தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பலம் பொருந்திய தூணாக விளங்கி வருகிறது. ஆனால், சர்வதேச சமூகம் மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கோட்பாடுகளை உருவாக்கி காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சமூகம் என்றும் எதிலும் நடுநிலையோடு அல்லது நேர்மையோடு செயல்படும் என எதிர்பார்ப்பது மடைமைத்தனம். நோர்வே எமக்காக நிற்கும் என கனவு காணவும் கூடாது. அமெரிக்கா சிறிலங்காவோடு இணைந்து எமக்கு அடிக்க வருவான் என கற்பனையும் பண்ணக்கூடாது. தமிழ் தேசியத் தலைவர் குறிப்பிடுவது போலு ‘பலம்தான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது.” உலக ஒழுங்கு என்பதே பலத்தில்தான் சுழல்கிறது.
இதனை மறுத்தால், இன்னொரு வடிவத்தில் பார்ப்போம்.
நோர்வே சரியாக செயற்பட்டிருக்குமாயின் பலஸ்தீன மக்கள் ராங்கிகளுக்கு முன்னே கற்களோடு நிற்க வேண்டிய தேவையோ, முற்காலங்களில் மிடுக்கோடு இருந்த ஒரு தலைவர் தனது மருந்துவதேவையை பூர்த்தி செய்ய இஸ்ரேலின் அனுமதியை வேண்டி தவம் இருக்க வேண்டிய நிலையோ ஏற்பட்டிருக்காது.
நோர்வே இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முன்வந்து தமிழர்கள் மீதான அனுதாபத்தில் இல்லை என்பதை தமிழர்கள் உணர வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லாதிக்க நாடுகளுகம், பல சுய இலாப நோக்கங்களும் பின்னணியில் இருந்தன. எரிக் சொல்கெயம், ஜோன் வெஸ்பேக், விதார் கெல்கீசன் தனிப்பட எம்மோடு நன்றாக பழகியிருக்கலாம். இது கூட ஒரு இராஜதந்திர வலைப்பின்னல் என்பதே உண்மை. பெரும் இலக்குகளில் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளிற்கு அப்பால் சுயநல தேசங்களின் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இல்லையெனில் தமிழர்களுக்கு ஒரு தொகுதி பொருட்களை வழங்கியதற்கு இனவாதிகள் கூச்சலிட்டதற்காக JVPயை ஜப்பானுக்கு அழைத்து சென்று சொகுசாக தங்க வைத்ததோடு தென்னிலங்கையில் குறிப்பாக அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் பெரும் அபிவிருந்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பார்களா? இவையெல்லாம் இராஜதந்திரத்தின் நகர்வுகளில் ஒரு வடிவம்.
அதேபோல் அமெரிக்கா எப்போதுமே எமக்கு எதிரி என்ற எண்ணமும் தப்பானது. அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நிரந்தர நண்பனுமில்லை என பொதுவாக பேசிக் கொள்வார்கள். அமெரிக்காவினுடைய பட்டியலில் தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதிகளாக சேர்க்கப்பட்டமை தமிழர்படையை தனது கைகளுக்குள் வளைத்துப் போடும் முயற்சியே தவிர, எமது விடுதலைப்போராட்டம் பயங்கரவாதம் இல்லையென்பது அமெரிக்காவுக்கு நன்கு புரியும். இன்றுவரை அதன் பட்டியலில் தமிழர்படை தொடர்வதற்கு காரணம் உண்டு. உண்மையான காரணம் என்னவெனில், அமெரிக்காவினுடைய கணக்கின் படி தமிழர்படை மீதான தடையைத் தொடர்ந்து நீடித்தால் தமிழர்படை நடுங்கிப் போய் தன்னிடம் பணியும் என கணக்குப் போட்டது. ‘றோ” வினுடைய வழிமுறையிலேயே CIA யும் கணக்கை நிறுவ முற்பட்டு தலை சொறிகிறது. பேனாக்கள் மாறுபட்டதே தவிர ஒரு கணக்கையே இரு தரப்பும் வௌ;வேறு வழிமுறைகளில் மேற்கொள்கிறது. ‘குனியாத தலைவன், பணியாத புலிப்படை, வளையாத மக்களின் போராட்ட பங்களிப்பு” போன்றவையே RAW வையும் CIA யையும் குழப்பமடைய வைத்துள்ளது. சிறிலங்காவை ஆதரித்தால் தனக்கு இலாபம் இருக்கும் என கருதியதாலேயே அமெரிக்கா சிறீலங்காவை ஆதரிகிறது. இறைமையுள்ள அரசுக்கு இறைமை பொருத்திய இன்னொரு அரசு உதவுவது என்பதெல்லாம் கண்கட்டி வித்தைக்கு ஒப்பானது. அமெரிக்காவுக்கு நிலவை கண்ணாடியில் பிடித்துக் கொடுக்கலாம் என சிறிலங்கா எண்ணியது. தன்னைப் போலவே பிறரையும் சிறிலங்கா நினைத்தது. அமெரிக்காவோ சிறிலங்காவின் திட்டத்தை உடனடியாகவே புரிந்து கொண்டது. அதன் வெளிப்பாடு தான் அமெரிக்காவின் கைப்பொம்மையான ஜ.நா.சபை செயலாளர் கோபி அனான் லெப்.கேணல்.கௌசல்யன் மரணமடைந்த போது வெளியிட்ட அறிக்கை. சிறீலங்கா திமிறினால், நாம் வளைந்தால் அமெரிக்கா தமிழர் பக்கம் சாயும். ஏனெனில், அவ்வாறான நகர்வினூடாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயஇலாபங்கள் பூர்த்தி செய்யப்படும்.
உலகம் நடுநிலைமையோடும் மனச்சாட்சியோடும் செயற்படுகிறதென்றால் ஈராக்கில் மரணங்கள் தொடர்கதை ஆகியிருக்க முடியாது.
தமிழீழம் கேட்ட தமிழர் சமஷ்டிக்கு கீழிறங்கி அதிலிருந்து இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கு நகர்ந்து இறுதியாக ஆக சுனாமியில் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களினை கட்டியெழுப்ப கைச்சாத்திட்ட சுனாமிக்கு பின்னரான உத்தேச பொதுக்கட்டமைப்பையே நடைமுறைப்படுத்தப்படுத்தாதா சிறீலங்காவும் அதற்கு முண்டு கொடுக்கும் உலகுமா எமது தேசத்தின் விடுதலைக்கு உதவப் போகிறது?
சாதாரண பொதுக்கட்டமையை நடைமுறைபடுத்த முடியாதவர்கள் நிலையான கௌரவமான ரீதியான சமாதானத்தை உருவாக்குவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு என்பது ஒரு உத்தேசமானது. ஆக 5 வருடத்திற்கே அதன் செயற்பாட்டிற்கு உத்தரவாதமிருந்தது. அப்படியிருந்தும் அதனைக் கொடுக்க எந்தவொரு சிங்கள பேரினவாத அரசியல் கட்சியும் முன்வரவில்லை. உலகமும் மௌனமாகவே இருந்தது. சமபங்காளிகளில் ஒருவர் வழி தவறிப் போனாலும் அதனை சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு வசதிப்படுத்துனருக்கு (facilitator) மத்தியஸ்தருக்கு (mediator) இருக்க வேண்டும். இதனை உரிய தரப்பு உருப்படியாக செய்ததா? தமிழர்களை நசுக்க பேரினவாதத்திற்கு ஆதரவாக நின்ற கூட்டம், பேரினவாதத்தால் தமிழரின் நியாயமான போராட்டத்தை வெல்ல முடியாது என தெரிந்து கொண்டதும் தானே களத்தில் குதித்துள்ளது.
8 இராணுவத் தளபதிகள், 4 ஜனாதிபதிகள் 5ற்கு மேற்பட்ட பாதுகாப்பு அமைச்சர்கள் என சீறிலங்காவின் வரலாறு நீண்டகாலமாக தொடர இவையனைத்திற்கும் ஈடாக தனித்து ஒரு மனிதனாக தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மிளிர்கிறார். (தமிழர்படையின் அடையாளமே பிரபாகரன்)
இவ்வாறான நிலையில்தான் சிறீலங்காவிற்கு பெரும் ஆயுத தளபாட உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கிய வல்லாதிக்க நாடுகளும் மறைமுகமாக நேசக்கரம் நீட்டிய நாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க திட்டம் திட்டி செயற்பட்டு வருகின்றன.
அது எப்படி என அலசுவோம்.நூற்றுக்கணக்கான சிறுவர்களை சிறீலங்கா படைகள் வடக்கு கிழக்கில் கொன்று குவித்த போது அமைதியாக இருந்த சிறுவர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகளும் நாடுகளும், சிறுவர்களை புலிகள் தமது படைகளில் இணைத்துக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டி வருகின்றன. (சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் பங்கு அதில் அளப்பரியது).
இந்த அமைப்புகளும் நாடுகளும் ஏன் இன்னொரு பக்கத்தை முற்றாகவே மறந்து போனார்கள்? விடுதலைப் புலிகளின் பராமரிப்பில உள்ள செஞ்சோலையிலும் அறிவுச்சோலையிலும் மட்டும் சுமார் 650 ற்கு மேற்பட்ட சிறுவர்கள் எந்தவித குறையுமில்லாமல் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களில் பலர் சகலதுறை விற்பன்னர்களாக திகழ்கின்றார்கள். இவர்களுடைய ஆளுமையை வைத்தே இவர் இங்கிருந்து தான் வருகிறார் என குறிப்பிட முடியும். அந்தளவிற்கு இந்த சிறுவர்கள் திறமைசாலிகளாக திகழ்ந்து வருகிறார்கள். தனித்து இந்த சிறுவர் இல்லங்கள் மட்டுமன்றி வேறு சில சிறுவர் இல்லங்களும் புலிகளின் ஆலோசனையோடும் ஆதரவோடும் இயங்கி வருகிறது.
இவற்றினை யாரும் சென்று பார்வையிடலாம். அப்படியான வசதியிருந்தும் உண்மையை கண்டறிய முன்வராத அமைப்புகளும் நாடுகளும் தொடர்சியாக புலிகளை குற்றம் சாட்டுவதிலேயே முனைப்பு காட்டி வருகின்றன.
சரி இவர்கள் குறிப்பிடுவது போல புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்துக் கொள்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம். சிறுவர்கள் என 18 வயதிற்கு கீழ்ப்பட்டடோரை குறிப்பிடலாம். புலிகளின் அமைப்பில் இணைய வருவோரில் பெரும்பாலானோர் 17 வயதுடையவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்.
ஜக்கிய நாடுகள் (ஜ.நா) சபை சட்டத்தின் படி ஒரு நாடு (தேசம்) 18 வயதிற்கு குறைந்த வயதுடையோரை படையில் இணைக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பானது ஒரு தேசத்தினை மீட்டெடுப்பதற்காக பேராடி வருகின்ற ஒரு இயக்கம் அதாவது உருவாகிக் கொண்டிருக்கின்ற ஒரு தேசம். ஆகவே, 17 வயதுடையோரை படையில் இணைத்துக் கொள்ள முடியும். தோற்றம் பெறுகின்ற போது குறித்த அமைப்புக்கள் தமது ஆரம்பக் கட்டத்தில் 16 வயதுடையோரை தமது படையில் இணைத்துக் கொள்ள முடியும்.18 வயதிற்கு குறைந்தோரை ஒரு நாடு/தேசம் (country/State) படையில் இணைத்துக் கொள்ள முடியாது. இதனை சல்லடை போட்டு தேடப்போனால் சிறீலங்கா தடுமாறும். மறுபுறமாக நோக்குவோமானால்,18 வயதிற்கு குறைந்தோரை படையில் இணைக்க கூடாது என்று கூறுவதனூடாக தமிழீழம் ஒரு தேசம்/நாடு என்பதை குற்றம் சாட்டுவோர் அங்கீகரித்து விட்டார்கள் என்ற முடிவுக்கு வரலாமா?
சரி விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிறுவர் உரிமை எப்படி முக்கியத்துவம் பெறுகிறது?
விடுதலைக்காக போராடிய அமைப்புக்களை முரண்பாட்டு உருமாற்றம் (conflict transforamatioan) செய்வதில் வல்லாதிக்க சக்திகள் முனைப்பு காட்டும். அதில் முக்கிய விடயமாக சிறுவர்களை படையில் இணைத்தலும் உள்ளது.
விடுதலை அமைப்புக்களை பலவீனப்படுத்தும் விடயமாக சமாதானம் உள்ளது. சமாதானம என்னும் போது, விடுதலை கோரி போராடிய அமைப்புகளிற்கு நியாயமான தீர்வினை வழங்க முன்னரே முரண்பாட்டு உருமாற்றம்/நிலைமாற்றம் (conflict transforamatioan) இற்கு உட்படுத்த உலகம் கவனம் செலுத்தும்.
இதன் மற்றுமொரு முக்கிய கட்டமாக ஆயுதக்களைவை (Disarmament) ஆட்கலைப்பு (Demobilisation) மீள திரட்டுதல்/மீளிணைத்தல் (Reintegration) ஆகியவை உள்ளது. இதனை சுருக்கமாக DDR என அழைப்பார்கள். விடுதலைப் போராட்டகளிற்கு DDR ஒரு பொறி கிடங்கு. இதனை அடிப்படையாக வைத்துத்தான் அடக்குமுறையாளர்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களை முறியடிக்கிறார்கள். DDR இன்று தமிழர் தேசம் அறிய வேண்டிய முக்கிய கட்டம் என்பதால் அடுத்த கட்டுரையில் இது தொடர்பாக ஆழமாக பார்ப்போம்.
DDR இன் நிழ்ச்சிக்கு அண்மையில் பலியான அமைப்புக்களை கூறலாம். 1.அயர்லாந்து 2. ஆச்சே
அயர்லாந்து போராளிகள் ஆயுதத்தை கையளித்ததை முன்மாதிரியாக் கொண்டு விடுதலைப் புலிகளும் ஆயுதக் கையளிப்பிற்கு முன்வரவேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன.
ஜனாதிபதி சந்திரிகா தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கதிர்காமர், நூல் ஆசிரியர் வில்சன் உட்பட பலரும் இந்த கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆயுதக்களைவிற்கு முன்னர் அதற்கு தகுந்த சூழல் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்தவொரு சூழலும் இலங்கைத் தீவில் இல்லை. மாறாக அதற்கான சூழலை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளே தொடர்கின்றன.
தனிநாட்டை கேட்டவர்கள் பொதுக்கட்டமைப்பு வரைக்கும் வந்துள்ளமையை உணர்ந்து மகிழ்வடைவதோடு பதிலுக்கு அரசாங்கமும் விட்டுக்கொடுத்திருக்க வேண்டும். மாறாக, அரசாங்கம், புலிகளை கோபப்படுத்தி சீண்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. புலியின் பொறுமையை சோதித்துப் பார்க்க முயல்கின்றது. புலிகள் பொறுமையிழந்தால் உலகம் தன்னோடு சாயும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்தை அவ்வாறு செயற்பட தூண்டியிருக்க முடியும். இவற்றை மனதில் வைத்தே புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பிரதான சக்திகளாக துiணைப்படையை (Paramilitary) கூலிப்படைகளை சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு பயன்படுத்துகின்றது.இந்த விடயம் பல தடவை கண்காணிப்பு உள்ளிட்ட பலராலும் நிரூபிக்கப்பட்ட போதும், மூன்று வருடத்திற்கு முன்னரே துணைப்படையை கலைத்துவிட்டதாக சிறீலங்கா இராணுவத் தளபதி சாந்த கோட்டேகொட கூறுகிறார். நிலவை முகிலுக்குள் மறைக்கும் முயற்சிக்கு ஒப்பானது இந்த முயற்சி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரந்து 1.8 இன்படி வடக்கு கிழக்கில் துணைப்படைக் குழுக்கள் இயங்குவது பாரிய போர் நிறுத்த மீறலாகும். ஆனால், சிறீலங்காவோ, சர்வதேச சமூகமோ இதனை உணர்ந்து செயற்பட இதுவரை ஏன் முன்வரவில்லை?
அவ்வாறு நிகழுமாயின் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. அதேவேளை புலிகளின் நியாயமான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டிய கட்டாய சூழலும் உண்டாகும். ஒப்பந்தத்திற்கு முரணான தாக்குதல்களால் புலிகளை பலவீனமடைய செய்யலாம். அதனூடாக புலிகளை வெற்றிக் கொள்ளலாம் என்பது தப்புக் கணக்கு. இந்த கணக்குத்தான் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.
துணைக்குழுக்கள் 3 வருடத்திற்கு முன் கலைக்கப்பட்டுள்ளதென்றால் சுமார் 1 1/2 வருடத்திற்கு முன் கொல்லப்பட்ட புளொட் மோகன் யார்? 1 1/4 மாதத்திற்கு முன் கொல்லப்பட்ட வரதர் அணி காந்தி யார்? (துணைப்படையின் முக்கியஸ்தர்கள்)
உலகின் இவ்வாறான கோட்பாடுகளினாலேயே தமிழர்களின் நிலைப்பாடும் மாற்றம் அடைய தொடங்கியது. அத்தகைய நிலைப்பாடு மாற்றம் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
2002/02/22 கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துணர்வில்லா ஒப்பந்தமாக மாறியது. பரஸ்பரம் இருதரப்புமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டது. இதற்கான வழிவகையை சிறீலங்காவே உண்டாக்கியது. போர்க்காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கையோ சொகுசான வசதியோ வடக்கு கிழக்கு மக்களிற்கு இருக்கவில்லை. ஏன் சாதாரண இயல்பு வாழ்க்கையே இல்லை. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னர் உள்ளதை விட முன்னர் ஒரு மகிழ்வு இருந்தது. அதனை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ஆனால், அதனை நினைக்கின்ற போதே ஒருவித சிலிர்ப்பும் மிடுக்கும் தோன்றும். அந்த காலத்தோடு ஒன்றித்து வாழ்ந்தவனுக்கு அது நன்றாக புரியும்.
பெற்றோச் பற்றறியை கடித்து கடித்து உபயோகித்த போதும் ஒரு திருப்தி இருந்தது.
தமிழர்படை தனது தேசத்தின் எந்தப் பகுதிக்கும் விரும்பிய நேரத்தில் விரும்பியபடி போக முடிந்தது. தடை வந்தால் உடைத்துவிட்டு சென்றார்கள். அன்று எங்கள் கடலில் நுரையை பார்த்தே பயந்த எதிரி இன்று எமது கடலின் மடிமீது ஏறி வருகிறான்.
மொத்தத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் எமக்கு எந்தவிதமான ஏற்றமான வாழ்வுமில்லை. ஏன். இயல்பு வாழ்வே இதுவரையில்லை. நாமோ புளுக்கத்தில் தெற்கோ புளுகத்தில்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழர்களின் கைகளிற்கு கட்டுப்போட்டது. எம்மை பார்த்து அஞ்சியவர்கள் நாம் விட்டுக்கொடுத்ததை கெஞ்சுவதாக எண்ணுகிறார்கள். எமது 20 வருடகாலத்திற்கு மேற்பட்ட பெறுமதிமிக்க விலை கொடுப்புகள், கேள்விக் குறியாகி விடுமோ என தமிழ் மக்கள் அஞ்ச தலைப்பட்டார்கள்.
இதன் விளைவுமக்கள் போராட்டங்கள் வடக்கு கிழக்கெங்கும் முனைப்பு பெற தொடங்கின.
இதன் முதற்கட்டமாக, 'தலைவரே போருக்கு ஆணையிடுங்கள்’ ‘பொறுத்தது போதும் பொங்கியெழு தலைவா’ 2005ம் ஆண்டு போர் ஆண்டென பிரகடனம், தலைவரே! நீங்கள் காட்டும் திசையில் செல்ல காத்திருக்கிறோம்” போன்ற தொனிப்பட மகஜர்கள் மக்களால் தமிழ் தேசிய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அடுத்து, தற்காப்பு பயிற்சியை தமக்கு வழங்க வேண்டும் என வன்னி மக்கள் கேட்டார்கள். இன்று தமிழர் தாயகப் பிரதேசத்தின் பெரும்பாலானோர் தற்காப்பு பயிற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘பொங்குதமிழ்” நிகழ்வின் போது நிகழ்வு இடம்பெற்ற மைதானத்திற்குள் அடக்கு முறையின் சின்னமாக இராணுவத்தினரின் மாதிரியொன்று கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்டதும் ஆத்திரமும், ஆக்ரோசமும் கொண்டு மக்கள் கூட்டம், ஒழுங்கமைப்பாளர்கள் அறிவுறுத்தல்களையும் தாண்டி செருப்புகளாலும், தடிகளாலும், கற்களாலும் அடித்து வீழ்த்தினார்கள்.
மற்றுமொரு நிகழ்வின் போது,புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சிறீலங்கா இராணுவம் மீறுகிறது. எம்மீது அடக்குமுறையையும் தாக்குதல்களையும் நடத்துகிறது. இனிமேல் நாம் பொறுமை காக்க மாட்டோம். திரும்பி தாக்குவோம் என்றார்கள்.
இந்த சம்பவங்கள் எல்லாம் உலகிற்கும் சிறீலங்காவிற்கும் ஒரு சேதியை மிக தெளிவாகவும் உறுதியாகவும் கூற முனைகிறது. அது யாதெனில் உரிமைகள் மறுக்கப்பட்டதினால் விடுதலை வேட்கையோடு போராட புறப்பட்டவர்கள் தமிழர்கள். அதேவேளை வன்முறையையோ போரையோ நாம் விரும்பவில்லை. ஆனால், எம்மீது திணிக்கப்படுகிற எதற்கும் அதற்கு உரிய வழியிலேயே பதிலடி கொடுக்க தயங்கப் போவதுமில்லை. எமது மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் கூடிய நீPதியான, கௌரவமான சமாதானத்தையே நிலைநாட்ட விரும்புகிறோம். அதற்காக அகிம்சை ரீதியிலான போராட்ட வடிவங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுமானால் நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். அப்போது, எமது மகஜர்களில் கூறியவையையும் மாதிரிகளை சரித்தமையும் நடைமுறையில் நிஜமாகவே செயல்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். எமது விடுதலையை நாமே வென்றெடுப்பதற்காக மீண்டுமொருமுறை ஆனால் இறுதியாக ஆயுதங்களை தூக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் ஒரு சிறந்தபடி எமக்கான தற்காப்பு பயிற்சி.
இம்முறை, மக்கள் வெள்ளம் ஓயாத அலையாக பெருக்கெடுப்பதற்குள் உலகே நீ ஒரு முடிவெடு. இல்லையேல் சிறீலங்காவின் ஓலம் உலகெங்கும் ஒலிக்கும் இதுதான் விடுதலையை அவாவிநிற்கிற தமிழ் மக்களின் நிலைப்பாடு. இந்த சேதிதான் உலகின் கோட்பாட்டிற்கு நிகராக சொல்லப்படுகிற தமிழரின் நிலைப்பாடு. நிலைப்பாடுகளோ கோட்பாடுகளோ நிலையான இருக்கவேண்டியதில்லை. இன்றைய தருணத்தில், உலகின் கோட்பாடு மாறவேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல், முன்னரே குறிப்பிட்டது போல தமிழர்களின் பலம்தான் அதனை மாற்றியமைக்கும்.
பன்னிரெண்டு போராளிகளை பலியெடுத்ததற்காக பெரும் வல்லரசையே எதிர்க்க துணிந்து வெற்றிபெற்ற எம் தலைவன், சாமாதான காலம் என சொல்லப்படுகின்ற காலப்பகுதியிலே 100இற்கு மேற்பட்ட போராளிகளையும் பொது மக்களையும் பறிகொடுத்த பின்பும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறார். அவருடைய நிதானமும் அமைதியும் கலைந்து அவர் பொறுமை இழந்தால் என்ன நடக்கும்?