தமிழ்த் தேசியவாதி

Thursday, August 13, 2009

தேர்தலும் தமிழ் மக்களுடைய தார்மீகப் பொறுப்பும்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் “மறுசீரமைப்பு” என்ற கட்டத்துக்குள் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த தருணத்திலே, அவர்களின் உரிமைப் போராட்டமும், மாறுபடாத உயரிய இலக்கினை அடைவதற்காக, வடிவங்களை மாற்றிக்கொள்ளள வேண்டிய சூழலை எதிர்நோக்கியுள்ளது. அந்த வடிவமாற்றத்தின் பிரதான அங்கமாக, வன்முறையற்ற வழியில் எமது போராட்ட சக்கரத்தை நகர்த்தி, ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்பும் ஒரு நகர்வை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

இதனை கட்டமைக்கும் ஒரு படிக்கல்லாக, எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள உள்ள+ராட்சி சபைத் தேர்தலை தமிழ்மக்கள் பயன்படுத்தலாம். வன்முறையற்ற வழியினிலே ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டம், காலத்தின் கட்டாயத்தாலும், அடக்குமுறையாளர்களின் நிர்ப்பந்தத்தாலும் ஆயுதம் தரிக்க வேண்டிய சூழல் உருவானது. முப்பத்தெட்டு வருடங்கள் கழிந்த நிலையில், அத்தகைய போக்கினை இன்றைய ப+கோள அரசியல் மாற்றியமைத்துள்ளது.

தமிழர்கள் வன்முறையை விரும்புகின்ற ஒரு சமூகம் அல்ல, அவர்கள் மீது திணிக்கப்பட்;;ட வன்முறையை எதிர்ப்பதற்கான ஒரு கருவியாக, மற்றும் தற்காப்புக்காக ஆயுதங்களை ஏந்தினார்கள் என்ற கருத்தை வலியுத்தி கூறிவரும் தமிழ் பேசும் மக்கள், ஐனநாயக பண்பில் தமக்கு இருக்கும் பற்றினை வெளிப்படுத்த வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. நீதி நெறி நின்று, இலட்சியத்தை வரிந்து கொண்டு 1976 ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரித்த தமிழ் தேசியம், தனது நிலைப்பாட்டை 2004 பொதுத் தேர்தலிலும் மீள்வலியுத்தியது. சுயநிர்ணய உரிமை அடிப்பைடயில் சுதந்திர தேசத்தை வேண்டி நிற்கும் தமிழ் தேசத்துக்கு இன்றும் உயிர் மூச்சாக திகழ்வது வட்டுக்கோட்டைத் தீர்மானமும், அதன் வழிவந்த திம்புக் கோட்பாடும் ஆகும்.

வலிகளை, இழப்புக்களை, அவலங்களை சுமக்காமல், சவால்களை, எதிர்ப்புக்களை, பின்னடைவுகளை, தோல்விகளை, துரோகங்களை சந்திக்காமல் எந்தவொரு இனவிடுதலைப் போராட்டமும் சுதந்திரம் அடைந்ததென்ற வரலாறு இல்லை. தோல்விகளினால் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் தோற்றம் பெற்று போராடிய இனங்களே, அடக்குமுறை என்னும் விலங்கினை உடைத்தெறிந்து, சுதந்திரக்கனவை நனவாக்கினார்கள்.

தமிழ் மக்களினுடைய உரிமைப் போராட்டமும், வரலாற்றிலே என்றுமே சந்தித்திராத நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தை நிரந்தரமாக்குவதனூடாக, தமிழர்களை தொடந்தும் அடக்குமுறை என்னும் பிடிக்குள் வைத்திருந்து, அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதைத்து, அவர்கள் மீதான இனஅழிப்புப் போரை இலாவமாக நகர்த்தலாம் என்ற உத்தியை அடக்குமுறையாளர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.

தமிழர்கள் என்ற அடையாளத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டுமானால், விடுதலை மீதான எமது பற்றை, தமிழர் தாயகம் மீதான எமது பிடிப்பை, அடக்குமுறைக்கு எதிரான எமது வன்முறையற்ற உணர்வை வெளிப்படுத்தி, எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்துக்கு உணர்த் வேண்டிய வரலாற்றுக் கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனுக்கும் உண்டு.

இத்தகையதொரு சந்தர்ப்பத்திலேயே, எதிர்வரும் 8ம் திகதி யாழ் மாநகராட்சி சபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழர்கள் என்ற இனத்தை இலங்கைத் தீவில் இல்லாமல் செய்வதற்கான ஒரு கருவியாக எதிர்வரும் தேர்தலை பயன்படுத்துவதற்கு அடக்குமுறையாளர்கள் திட்டமிட்டுள்ளாhர்கள். ஆகவே, அதனை முறியடித்து, தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட வன்னி மக்கள், அடிப்படைவசதிகள் இன்றி, முட்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களும், யாழ் மக்களும் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள்ளே வாழ்கிறார்கள். சிறீலங்காவின் தென்மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய சூழலுக்குள் இருக்கிறார்கள். ஆகமொத்தத்தில், தமிழ் பேசும் சமூகத்தின் அடிப்படை வசதிகள் ஆட்டம் கண்டு, இயல்பு வாழ்க்கையென்பது சீரழிந்து போயுள்ள சூழலிலே, அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?

தமிழர் தாயகத்கை சிங்கள மயமாக்கும் முயற்சியில் முனைப்பு காட்டியுள்ள அரசாங்கம், தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டபடி தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் என்ன?

போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தையும், போக்குவரத்துக்கான பாஸ் நடைமுறைகளையும் அமுல்படுத்துவதற்கு எதற்காக?

தொடரும் நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகளும், அதி உயர் பாதுகாப்பு வலயமும், இரவு நேர மீன்பிடித் தடையும் யாருக்காக? ஏதற்காக?

வாக்களர் இடாப்பு சரியாக பதியப்படவில்லை. வேட்பாளர்கள் மீதும், அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் அச்சுறுத்தல்களும், வன்முறையும் ஏவப்பட்டுள்ளது. வாக்குகள் மோசடிக்குள்ளாக்குவதற்கான செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேவேளை, மக்களோ தேர்தலில் அக்கறையற்றுள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்ற சந்தர்பத்திலே, தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

மக்களின் விருப்பத்துக்கும், ஒழுக்க விதிகளுக்கும் எதிராக நடத்த இருக்கின்ற தேர்தலை ஜனநாயகரீதியான செயற்பாடென வரைவிலக்கணப்படுத்தலாமா?

தன்மானமுள்ள தமிழர்கள் மேற்கூறப்பட்டுள்ள வினாக்களுக்கான விடையை புரிந்து, அதற்கு அமைவாக, எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள உள்ள+ராட்சி சபைத் தேர்தலில் செயற்பட வேண்டும்.

எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள உள்ள+ராட்சி தே;தலில், யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை விட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தமிழ் வாக்களர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில், உங்களுடைய வாக்கு என்பது உங்கள் வாழ்வை மட்டுமல்ல, குறைந்நது உங்கள் ஒரு உறவினருடைய உயிரிரையாவது, காப்பாற்றும், பாதுகாக்கும்.

திருத்தங்களுடனான வாசிப்பிற்கு,

http://www.puthinam.com/full.php?2bdwD6NJa0bckFm0Xe0ec4F5du30cc3d6KsY34d33YQo424b40pTX8D4d4eRRH7lcd0ea4l5kBde

0 Comments:

Post a Comment

<< Home